2861. கல்லான தூணுக்கு இணைவேறுண்டோ
காசினியில் சித்தனைப்போல் நீயுமாவாய்
வல்லான சித்தர்முனி
ரிஷியென்பார்கள் வையகத்தி லுனைக்கண்டோர் நடுங்குவார்கள்
புல்லான மானிடரா
யிருந்திட்டாலும் பூதலத்தி லுன்னையொரு நாதரென்பார்
வெல்லான ரிஷியென்று
நடுங்குவார்கள் வேதாந்தத் தாயருள்தான் வேண்டும்பாரே
விளக்கவுரை :
2862. பாரேதான் பராபரியாள்
அருளும்வேண்டும் பாருலகில் சித்தர்முனி கடாட்சம்வேண்டும்
சீரேதான் விட்டகுறை
காணவேண்டும் சிறப்பான தொட்டகுறை நேரவேண்டும்
நேரேதான் லலாட்ட
கருவிருக்கவேண்டும் நேர்புடனே இதுவெல்லாம் கூடினாக்கால்
கூரேதான் நினைத்ததெல்லாம்
சித்தியாகும் கொற்றவனே நீயுமொரு சித்தனாமே
விளக்கவுரை :
[ads-post]
2863. ஆமேதான் இன்னமொரு
கருமானங்கேள் அப்பனே யான்கண்ட வரைதான்கேளு
போனேனே சத்தசாகரமுங் கண்டேன்
பொங்கமுடன் ஏழுவகை தோற்றங்கண்டேன்
நானேதான் அஷ்டவகை
தீவுகண்டேன் நாட்டமுடன் அஷ்டபாலகரைக்கண்டேன்
கோனேதான் எனதையர்
காலாங்கிநாதர் குருபதத்தை வணங்கியல்லோ போனேன்பாரே
விளக்கவுரை :
2864. பாரேதான் குளிகையொன்று பூண்டுகொண்டு பட்சமுடன் தீவுகளிற் செல்லும்போது
நேரேதான் வெள்ளையானை
மீதிலேறி நேர்புடனே இந்திரனும் போகக்கண்டேன்
தேறேதான் அடியேனும்
சிறுபாலன்தான் சீக்கிரமாய் அடியேனும் பின்தொடர்ந்தேன்
நீரேதான் தேவேந்திர
பகவான்தானும் நிர்த்தமுடன் என்றனையும் யாரென்றாரே
விளக்கவுரை :
2865. யாரென்று கேட்கையிலே
அடியேன்தானும் அப்பனே கால்நடுங்கி மெய்நடுங்கியேதான்
சீருடனே காலாங்கி சீஷனென்றேன்
சிறப்புடனே யானுமல்லோ பக்கல்சென்றேன்
மார்புகழும் தேவேந்திரன்
என்னைப்பார்த்து பாலகனே சிறுவயதுள்ளபாலா
நேருடனே என்முன்னே
பயமில்லாமல் நேர்மையுடன் வந்ததினால் சாபந்தானே
விளக்கவுரை :