2771. சென்றேனே நாதாக்கள்
முனிவர்பக்கல் சேனையுடன் ரிஷிகூட்ட மங்கிருந்தார்
நின்றேனே நெடுநேரம்
சித்தர்பக்கல் நினைத்துமே காலாங்கிதனைநினைக்க
பன்றான நாதாக்கள்
முனிவர்சித்தர் பலபேரு மெந்தனுக்கு யாசீர்மித்தார்
குன்றான ரிஷிமுனிவர்
என்னைப்பார்த்து கூறுவார் அஞ்சலிகள் கோடிதானே
விளக்கவுரை :
2772. தானான போகர்முனி சொல்லக்கேளும் சார்பான சாத்திரத்தின் வுளவுயாவும்
கோனான காலாங்கி தன்பலத்தால்
கொட்டினீர் வித்தையெல்லாம் வெளியாய்ப்போச்சு
மானான வித்தையெல்லா
மிந்தமட்டும் மறைப்புடனே வைத்தாலே மதிப்புண்டாகும்
வேனான வித்தைகளை விருதாவாக
விரைதிட்டால் லோகமெல்லாம் சித்தாய்ப்போமே
விளக்கவுரை :
[ads-post]
2773. போமென்ற படியாலே இனிமேலப்பா
பொங்கமுடன் கருக்குருவை வெளியிடாதே
நாமொன்று சொல்லுகிறோம்
சித்தமாய்க்கேளு நாதாக்கள் சகலரும் பலநூல்சொன்னார்
வாமென்று நூல்களுக்குச்
சாபஞ்சொன்னார் வகையுடனே சாபமதை நிவர்த்திசெய்து
தாமொன்று செய்தவர்கள்
கோடிலொன்று தக்கபடி செய்தார் அனேகராமே
விளக்கவுரை :
2774. அனேகராம் மாண்பர்கள்
மெத்தக்கூடி அண்டரண்ட சராசரங்கள் திரட்டினார்போல்
சினேகரால் சிறுபாலர்
யாவுமொக்க சிறப்புடனே சிறப்புடனே கும்பல்கும்பலாகக்கூடி
அனேகமுடன் சாத்திரத்தை
கண்டாராய்ந்து சண்டாளர் மருமத்தைவெளியில்சொல்லி
முனேந்திரனாய்ப்
பாபத்துக்கேதுவாகிப் மூர்க்கமுடன் தவநிலையைக் கொடுத்தார்தாமே
விளக்கவுரை :
2775. காமான கரிவங்கம்
சேர்தானொன்று சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
வேமான மானதொரு கருமாக்கல்லை
வேகமுடன் கெந்தியது சமனாய்ச்சேர்த்து
சாமான மானதொருநிமிளையப்பா
சட்டமுடன் கொண்டுவந்து பின்னுக்கேளு
பூமான மானதொருபடிகந்தன்னை
புகழாகத் தானெடுத்து சரியாய்க்கூட்டே
விளக்கவுரை :