2701. பண்ணவே போகமுனி
ஏழாயிரங்கோர்வை பாடினேன் சித்தர்க்கா மென்றுசொல்லி
திண்ணமுடன் வயித்தியத்தின்
சார்புநூலை திரட்டிவைத்தேன் இந்நூலுக் குறுதிமெத்த
வண்ணமுடன் செய்பாகம்
அறிந்துசெய்தால் வலுவான நோயகன்று புனிதனாவாய்
எண்ணமுடன் காவியமாய்ச்
சத்தகாண்டம் இயற்றினேன் ஏழாயிரக் காண்டந்தானே
விளக்கவுரை :
2702. தானான வின்னமொரு
கருமானங்கேள் தாக்கான லிங்கமது பலந்தானப்பா
வேனான கட்டியொரு
லிங்கத்திற்கு வேகமுடன் முலைப்பாலில் சுறுக்குசாமம்
கோனான சங்கன்சார்
பலங்கார்சாமம் குறிப்புடனே சுறுக்கிடவே கட்டிப்போகும்
கானான மேற்போக்கு
மின்னங்கேளு கருவான வழிஞ்சியிட தயிலம்வாங்கே
விளக்கவுரை :
[ads-post]
2703. வாங்கியே லிங்கமது
சுறுக்குத்தாக்க வரிசைபெற லிங்கத்தின் சூதந்தானும்
தேங்கியே
யுள்ளடக்கிக்கட்டும் தெளிவான கெந்தியது புகையடங்கும்
ஓங்கியே லிங்கமது
கட்டிற்றானால் ஓகோகோ நாதாக்கள் அதீதமென்பார்
ஏங்கியே திரியாதே மன்னாபாரு
எழிலான லிங்கமது இறுகிப்போமே
விளக்கவுரை :
2704. போமென்று விடுகாதே
புகலக்கேளு புத்தியுள்ள பாலகனே இன்னஞ்சொல்வோம்
தாமென்ற மேதியின்பால்
கற்றாழம்பால் தயவாக சமனிடையாய் எடுத்துக்கொண்டு
நாமென்ற லிங்கமதை
சுருக்குத்தாக்கு நாயகனே லிங்கமது வுருக்குபோலாம்
காமென்ற லிங்கத்துக்கு
அங்கிசொல்வேன் கருவான தாம்பரத்திற் களங்குசெய்யே
விளக்கவுரை :
2705. செய்யவே களங்குடனே
சூதத்தானும் சிறப்பான சிங்கியுடன் சாரம்கூட்டு
பையவே அரைப்பொடியுங்
கூடச்சேர்த்து பாகமுடன் நிம்பழத்தின் சாற்றாலாட்டி
மெய்யவே சோடசாமம் பங்கதாக்கி
பேரான லிங்கத்தின்மேலேபூசி
துய்யவே ரவிதனிலே காயவைத்து
துப்புரவாய் சுண்ணாம்பு சீலைமாட்டே
விளக்கவுரை :