போகர் சப்தகாண்டம் 2396 - 2400 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2396 - 2400 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2396. இட்டேனே வின்னமொரு மாற்கம்பாரு வெழிலான கெந்தருவ வித்தையப்பா
சட்டையொன்று இரும்பாலே செய்துகொண்டு சாங்கமுடன் தலைதனிலே குழையமைத்து
சட்டமுடன் சங்கிலியால் கயிருண்டு கருத்துடனே மார்பதனில் தானணிந்து
திட்டமுடன் கழுத்துமிக மூடல்செய்து தெளிவுடனே நாசிவழிக்குழைசெய்வாயே

விளக்கவுரை :


2397. குழைதனிலே வடகலைதென்கலைமாற்றி குறிப்புடனே நாசிவழிக்காற்றுசெல்ல
இழையுடனே திரிபோல யிருண்டாக்கி யெழிலான கயிறுக்குள் துவாரமிட்டு
பிழையென்றும் நேராமல் கழுத்தைச்சுற்றி பிடரியிலே முடிச்சியுடன் பின்னல்செய்து
நுழையாமல் சமமதுவும் திருவல்பூண்டு நுணுக்கமுடன் தேகமதில் பூண்டுகொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

2398. பூண்டுமே காலடியில் இரும்புமாட்டி பொங்கமுடன் இரும்புக்கு குண்டுவைத்து
நீண்டுமே தானுமல்லோ தாணிகட்டி நெடிதான வாரிதியில் மத்திபத்தில்
தாண்டியே மரத்தினின்று குதிக்கும்போது தாழ்வாகத் தாரிணியைக் காணலாகும்
வேண்டியே ராமுழுது முன்னிருந்து விருப்பமுடன் மேலேறி வருகலாமே

விளக்கவுரை :


2399. வருகவென்றால் மேல்நிற்கும் சூட்சந்தன்னை வாகுடனே யோரால்தான் தூக்கினாக்கால்
பெருகலுடன் சமுத்திரத்தை விட்டுமைந்தா பெருமையுடன் கரைவழியே காணலாகும்
துரிதமுடன் கடலுள்ளே சென்றுநீயும் துலையாத பொருள்களெல்லாம் காணலாகும்
பருவமுட னிதிகாசவித்தையப்பா பாகமுடன் போகரிஷி பாவித்தேனே

விளக்கவுரை :


2400. பாலித்தேன் இன்னமொரு மார்க்கமப்பா பாருலகில் யாருந்தான் சொன்னதில்லை
சாலித்த கிரேதாயினுகத்திலப்பா சத்தசாகரம் பொங்கிமேல்வழிந்து
வாவித்து கோட்டையது ஜலமேகொண்டு மண்மூடி ஜலமதுவும் மிகவேகோர்த்து
பாலித்து தேசமெல்லா முழுகிற்றென்று பாலித்தார் காலாங்கி எனக்குந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar