போகர் சப்தகாண்டம் 2796 - 2800 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2796 - 2800 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2796. ஏகுமே கபாலவலி சன்னிபாதம் யெழிலான தலைகனப்பு யெல்லாமாறும்
போகுமே மந்தார காசம்போகும் பொலிவான கண்கூச்சும் புழுவெட்டும்போம்
சாகுமே கண்ணில்நீர்வடிதலும்போம் சார்பான குத்திருமல் சன்னதாகும்
பாகுடனே இத்தயிலம் கொள்ளும்போது பறக்குமடா நேத்திரநோய் அகலும்பாரே

விளக்கவுரை :


2797. அகலுமே பத்தியமோ யரையக்கேளு அப்பனே கரப்பனென்ற பதார்த்தந்தள்ளு
நிகலவே பகல்நித்திரைக் கொள்ளலாகா நீடூழிநாள்வரைக்கும் போகமாகா
தாகவே சீதளமாம் பண்டமாகா தாக்கான புளிகையும் மசூகுமாகா
புகலவே காலாங்கி நாயர்பாதம் புகழுடனே யான்வணங்கி புகன்றிட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

2798. புகன்றிட்டேன் தயிலமது என்னசொல்வேன் புகழான சந்தனாதி இதற்கொவ்வாது
தகன்றிட்ட சாத்திரத்தில் அனேகமுண்டு தக்கவே யாருந்தான் சொல்லவில்லை
அகன்றிட்ட சாத்திரத்தில் அனேகமுண்டு அப்பனே யான்சொன்ன கவிபோல
பகன்றிட்ட நாதாக்கள் முனிவர்தாமும் பாடினார் கோவைகளு மனந்தமுண்டே

விளக்கவுரை :


2799. உண்டான சாத்திரங்கள் அனேகமுண்டு உத்தமனே என்போல யாருஞ்சொல்லார்
திண்டான போகரேழாயிரந்தான் திரட்டினே சத்தககண்டத் திறமதாக   
பண்டான சீனபதியுலக்த்தார்க்கு பலபலவா யோதிவைத்தேன் பான்மையாக
சண்டான மானதொரு தேசத்தாற்குச் சாற்றினால் பாவம்வரும் என்னலாமே

விளக்கவுரை :


2800. என்னலா மின்னமொரு கருமானங்கேள் எழிலான தயிலமது இன்னஞ்சொல்வோம்
பன்னவே சதாவேரு மூலிதானும் பாகமுடன் சார்நாழி தானேயாகும்  
நன்னயமாய் குலாமல்லி மூலிச்சாறும்நாட்டிலுள்ள பொன்முசுட்டை சார்தான்நாழி
தன்னயமாய் சீறாசெங்கழுநீரப்பா தண்மையுடன் சார்நாழி தானுங்கூட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar