2791. உறுதியா மின்னமொரு
மார்க்கம்பாரு வுண்மையாயுரைக்கிறோம் பண்பதாக
நிறுதியாய் நெல்லிக்காய்
சார்தானாழி நீடான கையான்சார்சாருனாழி
பறுதியாம் முகக்கைச்சார்
நாழியாகும் பாங்கான வெள்ளரிசார்தானாழி
துறுதியாம் யெள்ளெண்ணெய்
படிதானொன்று துடிப்புடனே யாவின்பால் படிதானொன்றே
விளக்கவுரை :
2792. ஒன்றான யௌநீரு படிதானொன்று
வுத்தமனே இதிற்சேர்க்கும் மருந்துகேளு
பன்றான கடுக்காய் தான்றி
பாங்கான சிவதையுடன் நெல்லிதானும்
வன்றான விலாமிச்சு
வெட்டிவேறு தாக்கான சந்தனமு மகிலுங்கூட்டி
குன்றான நன்னாரி கோரைதானும்
குறிப்பான பச்சிலையும் ஒக்கச்சேரே
விளக்கவுரை :
[ads-post]
2793. சேர்க்கவே யதிமதுரம்
தேவதாரம் சிறப்பான கச்சோலம் சீரங்கூட்டி
பார்க்கவே முட்டியுடன்
சாம்பிராணி பாகமுடன் ஏலக்காய் கோஷ்டந்தானும்
தீர்க்கமுடன் வலம்புரியும்
இடம்புரியுமாகும் திறமான சீரகமும் ஒக்கக்கூட்டு
ஏர்க்கவே சடாமாஞ்சி
பூலாதானும் எழிலான தண்ணீர்மிட்டான் கிழங்குதானே
விளக்கவுரை :
2794. கிழங்கான சரக்கெல்லா
மொன்றாய்க்கூட்டி கெணிதமுடன் வகைவகைக்குப் பலந்தான்காலாம்
தழங்கான சரக்கெல்லாம்
ஒன்றாய்க்கூட்டி தயவாகத் தேங்காய்பால் தன்னாலாட்டி
வழங்கான எண்ணெய்தனில்
கலக்கியப்பா வாகுடனே மெழுகுபதந்தன்னிற்காச்சி
பழங்கமுடன் கணபதியைப்
போற்றியேதான் பாகமுடன் சிவப்பதாய்க் காய்ச்சிடாயே
விளக்கவுரை :
2795. காச்சவே யெண்ணெய்தனை வடித்துக்கொண்டு
கலங்காமல் சீஷாவிலடைத்துமைந்தா
பாய்ச்சலுடன்
வாரத்திற்கிரண்டுமுறை பாலகனே முழுகிவரப் பலனைக்கேளு
தீச்சலென்ற பிடரிவலி
சன்னிபாதம் திகழான மயக்கமுதல் காணாதோடும்
மாச்சலுடன் நேத்திரத்தில்
ரோகம்போகும் மகத்தான ஒருதலைநோய் போகும்பாரே
விளக்கவுரை :