2531. பாரேதான் மெழுகெடுத்து
பதனம்பண்ணு பாங்கான காயசித்தி மருந்தென்பார்பார்
சீரேதான் மண்டலங்கள்
கொண்டுசென்றால் திறளான வியாதியது ஏகும்பாரு
கூரேதான் சொன்னபடி
வியாதிமார்க்கம் கூறுவேன் மாணாக்கள் பிழைக்கவென்று
நேரேதான் மேகமென்ற திருபதும்போய்
நெடிதான குஷ்டம்பதினெட்டும்போமே
விளக்கவுரை :
2532. போகுமே காப்பன் பதினெட்டும்போகும் பொல்லாத குன்மமது எட்டும்போகும்
ஏகுமே வாயுவென்ற
தெண்பதும்போம் எழிலான பித்தம்நாற்பதுவும்போகும்
சாகுமே சேத்துமங்கள்
தொண்ணூற்றாறும் சார்வான கிரந்தி பதினெட்டும்போகும்
வேகுமே
சூலைபதினெட்டும்போகும் வேவமுட னரையாப்பு வெள்ளைபோமே
விளக்கவுரை :
[ads-post]
2533. வெள்ளையென்ற ரோகமது ராஜரோகம்
வெளிகாணா ரோகமது சகரோகம்போம்
கிள்ளையென்ற ஷயமதுவும்
பதினெட்டும்போம் கீழான பாண்டுமுதல் மகோதரம்போம்
வள்ளையென்ற
காமாலையாறும்போகும் வாகான நீரிழிவு மதுமேகம்போம்
கொள்ளைகொண்ட வயிற்றுவலி
விம்மல்போகும் கொடிதான சுரமுதலு மகன்றுபோமே
விளக்கவுரை :
2534. அகன்றுபோம்
சகலவிதநோய்கள்தானும் அப்பனே தேகமது வன்னிமீறும்
துகன்ற தொருவனுபான
மறிந்துகொண்டால் துடிப்புடனே நரம்பெல்லாம் வலித்துக்காட்டும்
புகன்றதொரு தேகமது
காந்திவீசும் புகழான தேகமது யிறுகும்பாரு
நிகன்றதொரு காயாதி
கற்பமென்பார் நீனிலத்தில் சித்தர்செய்யம் வேதையாமே
விளக்கவுரை :
2535. வேதையாம் கோடிவழிவேதையுண்டு
வேகமுடன் செய்பாகம் யாருஞ்செய்யார்
பாதையாம் இம்மருந்து
வதீதமெத்த பாகமுடன் யான்முடித்தேன் இந்தபாகம்
தோதமுடன் சித்தர்முனி
ரிஷிகள்தானும் தோற்றமுடன் தான்முடித்தார் அனந்தபாகம்
காலமுடன் காலாங்கிநாதர்பாதம்
கருத்துடனே யான்வணங்கி பாடினேனே
விளக்கவுரை :