போகர் சப்தகாண்டம் 2556 - 2560 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2556 - 2560 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2556. போடவே மூன்றுபுடம் உமிநீராலே பொங்கமுடன் தாட்டின்மேல் லேசாப்பூசி
தேடவே பூங்காவி தன்னிற்போடு தெளிவாக மாற்றதுவும் ஒன்பதாகும்
நீடவே யுருகிப்பார் மாற்றேகாது நிலையான புடத்துக்கு வலுத்ததங்கம்
சாடவே மட்டமது பழுப்புமாகா சாங்கமுடன் பசும்பொன்னிற் போடக்கேளே

விளக்கவுரை :


2557. கேளேதான் இவ்வேதை சிடிகைவேதை கெணிதமுடன் நாதாக்கள் செய்யும்வேதை
கோளேதான் வாறாது குருவின்மார்க்கம் கூறுவேன் வின்னமொரு மார்க்கம்பாரு
தானேதான் வுப்பினிட செந்தூரத்தை தாக்குடனே செய்வதற்கு தகைமைகேளு
வீணேதான் செந்தூரப்போக்கும் சித்தினிலே சொல்லியல்லோ மறைத்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2558. தாமான வுப்பதுவும் சேர்தானொன்று தாக்கான துருசதுவும் சேர்தான் நாளாம்
வாகான தும்பலென்ற பூண்டினாலே வகையுடனே தானரைப்பாய் நாலுசாமம்
காமான பில்லையது தட்டிமைந்தா கருவாக ரவிதனிலே காயவைத்து
நாமான வோட்டிலிட்டுச் சீலைசெய்து நலமாகப் புடம்போடக் கட்டிப்போமே

விளக்கவுரை :


2559. கட்டியதோர் உப்புதனை எடுத்துக்கொண்டு கருத்துடனே முன்போல மூலியாலே
திட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம் திறமாக ரவிதனிலே காயவைத்து
சட்டமுட னோட்டிலிட்டுச் சீலைசெய்து சாங்கமுடன் கோழியென்ற புடத்தைப்போடு
சிட்டமென்ற உப்பதுவும் காரமேறி கிருபையுடன் தான்சிவக்கும் பாண்மையாமே

விளக்கவுரை :


2560. பான்மையாம் இப்படியே ஐந்துபத்து பாகமுடன் புடம்போடச் சிவவ்கும்பாரு
வான்மையுடன் கரிப்பில்லஐ கசுவுமில்லை வளமாக வுக்குக்கு காரமெத்த
தான்மையுடன் கரிதனிலே வுருகியாடும் தகைமையுடன் மணிபோல ஒளிவுவீசும்
கான்மையுடன் மணிதனையே உமிநீராலே கருத்துடனே மட்டமென்ற பொன்னிற்பூசே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar