போகர் சப்தகாண்டம் 2501 - 2505 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2501 - 2505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2501. கூறான வாலையிலே ஓரமப்பா கொப்பனவே கட்டுவகை தரிக்கலாகும்
தாரான காயிதமுமஞ் சுற்றோரந்தான் சாங்கமுடன் திருகியல்லோ நிற்கும்பாரு
சேறான வாலையது வோடிகொண்டு தெளிவான புகையுடனே வாடிநிற்கும்
பாறான கட்டுவகை தரித்தபின்பு பாகமுடன் கீழ்புறமாய் தள்ளலாச்சே

விளக்கவுரை :


2502. ஆச்சென்ற வாயது நிந்தித்தானும் அப்பனே லட்சமது கோடிக்கோடும்
காச்சலென்ற கடிதாசி செய்யும்நேர்மை காசினியில் சித்தர்முனி செய்ததில்லை
மாய்ச்சலுடன் சீனபதியானும்சென்று மார்க்கமுடன் கருவான வேதையாவும்
பாச்சலுடன் காலாங்கி நாதர்தம்மால் பாலித்தேன் வெகுகோடி வித்தைதானே

விளக்கவுரை :

[ads-post]

2503. வித்தையா மின்னமொரு பாகங்கேளு வேடிக்கை வினோதமென்ற வித்தையப்பா
சுத்தமுடன் பஞ்சவர்ண மையினாலே சுருதியுடன் ஆலைதனிலேற்றிமைந்தா
பத்தமுடன் ஆலைவாய்ப்ப் படலின்மேலே பாங்குடனே பூசியல்லோ வாலைக்குள்ளே
வெத்தியென்ற காகிதத்தை வாலைதன்னில் விருப்பமுடன் தான்கொடுத்து செப்பக்கேளே

விளக்கவுரை :


2504. கேளேதான் காகிதம் படிந்தபின்பு கெடியான வன்னமென்ற பேதிதன்னை
தாளவே திராதகமாய் எடுத்துக்கொண்டு தகைமையுடன் சபுரியின்றன் மயிரினாலே
மீளவே கத்தையாய்க் கட்டிக்கொண்டு விருப்பமுடன் தான்தெளிக்க வர்ணம்பாயும்
சாளவே கடிதமெல்ம் வர்ணபேதம் சார்பாகக் காட்டியல்லோ பரவுந்தானே

விளக்கவுரை :


2505. தானான வனேகவிதம் செய்யலாகும் தகைமையுடன் வாலையென்ற வாலைதன்னால்
கோனான என்னையர் காலாங்கிநாதர் கொட்டினார் லோகத்தில் அனந்தம்வேதை
பானாக யெனைப்போல வெளியரங்கம் பாடினார் லோகத்து மாந்தர்க்கில்லை
தேனான வமுர்தம்போல் சத்தகாண்டம் திரட்டினேன் ஏழாயிரம் உண்மைபாரே   

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar