போகர் சப்தகாண்டம் 2366 - 2370 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2366 - 2370 of 7000 பாடல்கள்


bogar-saptha-kaandam

2366. தாமான பூநீரு விபரஞ்சொல்வோம் தாக்கான மனிதனுக்கு வலைதான்கட்டி  
சாமான மானதொரு ஜலத்தைவிட்டு சண்ணலுடன் தான்கரைத்து சாடிதன்னில்
தேமமுடன் தெளிவிருத்து மறுபாண்டத்தில் தெளியவே வடிகொண்டுகாய்ச்சும்போது
சாமமென்ற வர்ணமதிகங்காட்டும் சார்பாக பின்னுமொரு பாண்டம்போடே

விளக்கவுரை :


2367. போடவே பூநீரை முன்போல்காய்ச்சி புகழாகத் தானிறக்கி யெடுத்துப்பாரு
நீடவே பூநீரும் வெளுப்புமாகிப் நிலையான வெளுப்புக்கு முதற்றரம்தான்
கூடவே வுருக்குக்கு காலன்கூட்டி கொப்பெனவே எடுத்துப்பார் தவளம்போலாம்
சாடவே தவளத்தை பின்னும்பாண்டம் தகைமையுடன் தான்போட்டு காய்ச்சிடாயே

விளக்கவுரை :

[ads-post]

2368. காய்ச்சியே முன்போல வடிதான்கொண்டு பாகமுடன் தான்காய்ச்சி எடுத்துப்பாரு
பாய்ச்சலுடன் பின்னுமோர் பாண்டம்விட்டு மறுபடியும் கனலேற்றிக் காய்ச்சும்போது
பேச்சலென்ற நீச்சதுவு மட்டுமாகி எழிலான படிகம்போல் வர்ணமாகும்
வாச்சலுடன் வர்ணமது பேதாபேதம் வகுக்கலாம் வெகுகோடி வழிகளாமே

விளக்கவுரை :


2369. வகுக்க வென்றாலிதனாலே வெகுவினோதம் வளமையுடன் செய்யலாம் பூமிதன்னில்
வகுக்கலாம் பிருத்திவியில் பிரந்தவர்ணம் வாகுடனே செய்யலாம் பூநீராலே
வகுக்கலாம் வரும்பொன்மணி வாபரணங்கள் வர்ணமுடன் செய்யலாம் கோடிபாதை
வகுக்கலாம் ஒளிவடப்பூநீராலே வண்ணவண்ண வதங்களெல்லாம் நாட்டலாமே

விளக்கவுரை :


2370. நாட்டலாம் சீனபதி நடுமையத்தில் நலமான பூநீரு விபரஞ்சொல்வோம்   
நோட்டமுடன் பூநீராம் மண்ணையப்பா நுணுக்கமுடன் தானெடுத்துக் காய்ச்சும்போது
தாட்டிகமா யுவர்மண்ணு சுண்ணாம்பாலே தளிருடனே பிசைகிக்கு களிப்புண்டாகும்
வாட்டமுடன் குயவனார் பாண்டமொய்யாய் வளமையுடன் தான்வகுக்க வளமைகேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar