போகர் சப்தகாண்டம் 2736 - 2740 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2736 - 2740 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2736. பாரேதான் கரியோட்டி லூதிப்போடு பாகமதாய் செம்பதுவும் நீங்கியேதான்
நீரேதான் வெள்ளியது மாற்றுகாணும் நிலையான பொன்னதுவும் ஆறுமாகும்
நேரேதான் தங்கமது ஒன்றுசேர்த்து சிறப்புடனே வாரடித்துப் புடத்தைப்போடு
கூரேதான் போன்னதுவும் எட்டுமாகும் குணமான பிறவியது யாகுந்தானே

விளக்கவுரை :


2737. தானான தங்கமது பசுமைகாணும் தாக்கான பொன்னதுவும் சிவயோகிக்காம்
வேனான பொன்னதுவும் ரிஷிகள்சித்தர் விருப்பமுடன் தான்செய்யம் அதீதவித்தை
கோனான காலாங்கிநாதர்பாதம் குறிப்புடனே யான்வணங்கி வதீதங்கேட்டு
பானான மானிடர்கள் பிழைக்கவேண்டி பாடினேன் சத்தகாண்டம் பண்பாய்த்தானே

விளக்கவுரை :

[ads-post]

2738. பண்பான போகரிஷி அடியேன்தானும் பாகமுடன் செய்துமல்லோ கண்டாராய்ந்து
நண்பான சாத்திரத்தை விரித்தாராய்ந்து பண்பான மானிடர்கள் பிழைக்கவேண்டி
நண்பானசிவயோகம் மிகுதிகாட்டும் நாதாக்கள் வித்தையிது நவிலப்போமோ
கண்பான விதியாளி காண்பான்பாரு கைலாசகாணியது லயிக்குந்தானே

விளக்கவுரை :


2739. தாமான மின்னமொரு பாகங்கேளு தயவுடனே சொல்லுகிறேன் தன்மையாக
காமான நாகமொரு பலந்தான்வாங்கு கருவான குகையிலிட்டு உருகிக்கொண்டு
பாமான சாரமதை பலந்தான்கொண்டு பதமுடனே கிரசாரமது தன்னையீவாய்
நாமேதான் சொன்னபடி நாகந்தானும் நயமுடனே கண்ணதுவும் அடையும்பாரே

விளக்கவுரை :


2740. அடைவுடனே நாகமதுதன்னையப்பா அப்பனே பில்லையது தகடதாக்கி 
படையுடனே தாளகமும் சிந்திதானும் பதமுடனே சரியெடையாய் எடுத்துக்கொண்டு
தடையறவே நிம்பழத்தின் சாற்றாலாட்டி தாக்கான நாகத்துக் கங்கிபூசி 
சடையுடனே ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் புடம்போடக் கட்டியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar