2571. ஆட்டவே பனிரண்டு சாமந்தானும்
அப்பனே வெண்ணெய்போல் பில்லைதட்டி
பாட்டடா பில்லையது
ரவியிற்போடு மயங்காதே மன்னவனே ஓட்டிலிட்டு
மூட்டடா சீலையது வலுவாய்ச்
செய்துமூர்க்கமுடன் கெஜமென்ற புடத்திற்போட்டு
தீட்டடா பின்னுமந்த
எருக்கன்பாலால் திறமாக தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
2572. நாலான சாமமது வரைத்தபோது நாயகனே பில்லையது காயவைத்து
தாலான ரவிதனிலே
காய்ந்தபின்பு தகைமையுடன் ஓட்டிலிட்டு சீலைசெய்து
மேலான பஉடமதுவும்
கெஜமேயாகும் உத்தமனே யாறினபின் னெடுத்துப்பாரு
பாலான
பற்பம்போலிருக்கும்பாரு பாலகனே யிப்படியே பத்துபோடே
விளக்கவுரை :
[ads-post]
2573. போடையிலே தசபுடமுந்
தீர்ந்தபின்பு பொங்கமுடன் காரமென்ற தும்பப்பூண்டு
தேடையிலே தானரைப்பாய்
ஆறுசாமம் தெளிவாக பில்லையது தட்டிமைந்தா
மேடையிலே ரவிதனிலே காயவைத்து
மேன்மையுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
கூடையிலே புடமதுதான்
கெஜமேயாகும் கொற்றவனே புடமாறி யெடுத்துப்பாரே
விளக்கவுரை :
2574. பார்க்கையிலே பற்பமது
சிவப்புகொஞ்சம் பார்த்திவனே யிதிற்பத்து புடமேபோடு
சேர்க்கையிலே புடமதுவுந்
தீர்ந்தபின்பு செயலான மூலியது செப்பக்கேளு
மூர்க்கமுடன்
பொன்னாவாவாரைதான் மூலிமியன்மையுடன் தானரைப்பாய்யெட்டுசாமம்
தீர்க்கமுடன் தானரைத்து
பில்லைதட்டி திறலாக ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
2575. காய்ந்தபின்பு ஓட்டிலிட்டு
சீலைசெய்து கனமாக நூறெருவிற் புடத்தைப்போடு
மாய்ந்தபின்பு தீயாறி
யெடுத்துப்பாரு மன்னவனே செந்தூரம் வர்ணம்காணும்
சாய்ந்தலுடன் இப்படியே
பத்துபோடு சார்பாக புடமதுவுந் தீர்ந்தபின்பு
எய்தலுடன் உதரமாம் வேங்கை
தன்னால் எழிலாக தானரைப்பாய் சாமம்ரெண்டே
விளக்கவுரை :