போகர் சப்தகாண்டம் 2631 - 2635 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2631 - 2635 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2631. பலிக்காது காமிகட்கும் கர்மிகட்கும் பாங்குடனே பாவியென்ற சண்டாளர்க்கும்
ஜொலிக்காது யேகமென்ற வித்தையப்பா சூட்சாதி சூட்சத்தைக் காணமாட்டார்
ஒலிக்கவே பூரணத்தை மனதிலுண்ணி யுத்தமனே யெந்நாளும் சிவயோகம்பார்
கெலிக்கவே பிராணாயந்தன்னிற்சென்று கெவனமுடன் குளிகைக்கு வழிதான்தேடே

விளக்கவுரை :


2632. தேடவே குளிகையது பூண்டுகொண்டு தேசத்தில் வித்தையெல்லாம் கண்டுபாரு
நாடவே இம்மருந்தை மைந்தாபாரு நளினமுடன் நெய்தேனிற்கொண்டு வந்தால்
ஊடவே மேகமென்ற திருபதும்போம் உத்தமனே யீளையயு காசம்போகும் 
பாடவே பாண்டுவகை யாறுந்தீரும் பாங்குடனே குன்மமெட்டுந் தீரும்பாரே  

விளக்கவுரை :

[ads-post]

2633. தீருமே பீலிகையும் கவுசிக்கட்டி தீங்குசெய்யும் சூலையது விட்டுப்போகும்
கூருடனே வாயுவென்ற தெண்பதும்போம் கொடிதான சயமுதலும் அகன்றுபோகும்
நேருமே மூலமுதல் பவுத்திரம்போம் நெடிதான மந்தார காசம்போகும்
பாருமே மேல்மூச்சு வாதம்போகும் பட்சமென்ற வாதமது கழன்றுபோமே

விளக்கவுரை :


2634. கழன்றுமே போகுமது சிலேத்துமந்தானும் கண்ணிலுள்ள வியாதியெல்லாம் கதிகெட்டோடும்
கழன்றுமே தேகமது கற்றூணாகும் தகைமையுடன் எந்நாளு மிருக்கலாகும்
பழன்றுமே சாமாதிக்குள் இருக்கலாகும் பாரினிbலெ நீயுமொரு சித்தனாவாய்
அழன்றுமே போகாதே வீண்போகாதே அப்பனே தேகமது கற்றூணாமே

விளக்கவுரை :


2635. கல்லான தூணதுபோலாகும்பாரு கருவாக வின்னமொரு கருமானங்கேள்
புல்லான விருட்சமது சொல்லக்கேளும் பகலரிய மேருவுக்கு வடபாகத்தில்
கல்லான சித்தரமுனி வாசஞ்செய்யும் காடான கானொன்று குகைதானுண்டு
செல்லான புத்துகளும் அனேகமுண்டு செயலான காணாறு வோடையுண்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar