போகர் சப்தகாண்டம் 2616 - 2620 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2616 - 2620 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2616. ஆச்சென்று விடுகாதே யன்பாய்கேளு அப்பனே வெள்ளியது ஏழுமாகும்
மாச்சலென்ற செம்பதுவும் மூன்றேயாகும் மகத்தான குகைதனிலே யுருக்கியப்பா
காச்சலுடன் பத்துக்கு ஒன்றுபூரம் கருவாக தானுருக்கி கொடுத்துபார்க்க
பேச்சொன்று மில்லையப்பா பொன்னேயாகும் பொன்னவனே மாற்றதுவுமாகும்பாரே

விளக்கவுரை :


2617. பாரேதான் கரியோட்டிலூதிப்போடு பாங்கான செப்பதுவும் நீங்கியேதான்
நேரேதான் வெள்ளியது எடைதானிற்கும் நேர்மையுடன் இரண்டுக்கோர் தங்கஞ்சேர்த்து
வேரேதான் வாரடித்து புடத்தைப்போடு வாகான தங்கமது யிறங்கும்பாரு
சீரேதான் பிறப்பென்ற தங்கமப்பா தேசத்திற் கிட்டாது புண்ணியற்கே

விளக்கவுரை :

[ads-post]

2618. புண்ணியத்தால் இவ்வேதை வாய்க்குமல்லால் புகழான பூரமென்ற பற்பந்தன்னை
திண்ணமுடன் ஆறுமாற்றாம் மாணிக்கமப்பா திறமாக மட்டமென்ற பொன்னுமாகும்
வண்ணமுடன் தகடடித்து களஞ்சியப்பா வாகுடனே குன்றியது உமிநீராலே
வண்ணமுடன் தான்குழைத்து தடவிப்போடு தகைமையுடன் மாற்றதுவும் உயருங்காணே

விளக்கவுரை :


2619. காணவே பூரமது குன்றிதானும் கருவாகத் தானெடுத்து வனுபானத்தில்
தோணவே கொண்டாக்கால் வாய்வுபோகும் தோற்றமுடன் மேகமென்ற திருபதும்போம்
வேணவே சூலையோடு விம்மல்போகும் மிக்கான வயிறுவலி பொருமல்தீரும்
சீனமுடன் வக்கினியாமந்தந்நீரும் சிறப்பான குன்மமுதல் சொரிகள்போமே

விளக்கவுரை :


2620. போகுமே கசரோகமெல்லாம்போகும் பொல்லாத சயரோகமேகும்பாரு
ஏகுமே சிவ்விஷபாகமனைத்தும்போகும் எழிலான பாண்டுமுதல் கசிவுபோகும்
சாகுமே வீக்கமுதல் ரணங்கள்போகும் தாழ்வான ரோகமுதல் மூலம்போகும்
வேகுமே புண்களெல்லாம் சடலம்விட்டு வேகமுடன் தீருமென்று வறைந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar