போகர் சப்தகாண்டம் 2671 - 2675 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2671 - 2675 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2671. ஏழான காண்டமது பின்னுங்கேளு எழிலான நடுக்காண்டம் நாலாம்காண்டம்  
பாழான தேகமதுக் குறுதிசொன்னேன் பாலகனே தத்துவமூம் அதிகஞ்சொன்னேன்
நீழான வயித்தியமும் வாதஞ்சொன்னேன் நிலையான யோகத்துக்குறுதி சொன்னேன்
தாழான சிவயோகம் எளிதிற்சொன்னேன் தாரிணியில் அதீதமென்ற வித்தைதானே

விளக்கவுரை :


2672. வித்தையாம் இன்னமொரு பாகம்கேளு வேடிக்கை சிமிட்டுவித்தை போக்குசொல்வேன்
சுத்தமுள்ள வபினியது பலந்தானொன்று சுயமான கெந்தகமும் பலந்தானொன்று
துத்தமுடன் துருசதுவும் பலந்தானொன்று துடியான வீரமது பலந்தாநாலு
கத்தபத்தின் நீரதனை விட்டுயாட்டிக் கருத்துடனே மெழுகதுபோல் அரைத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

2673. அரைத்துமே சிமிழ்தனிலே பதனம்பண்ணு அப்பனே செம்பதுதானெடுத்துக்கொண்டு
வரையுடனே செம்புநிகர் மெழுகெடுத்து வளமாக தானுருக்கி கிராசமீவாய்
குறையாமல் செம்புருக்கி நிற்கும்போது குறிப்புடனே வரிசைபெறத் தன்னிலீவாய்
நிறையுடனே செம்பதுவும் சுத்தியாச்சு நிலையான களிப்பதுவும் ஏகலாச்சே

விளக்கவுரை :


2674. ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு அப்பனே செம்பெடுத்து மூன்றுவெள்ளி
பாச்சவே செம்பதுவும் ஒன்றேயாகும் பாலகனே தான்சேர்த்து வுருக்கிக்கொண்டு
மாச்சலென்று யிடையாதே பின்னுமைந்தா மார்க்கமுடன் தங்கமது ஒன்றுகூட்டி
பேச்சொன்றுந் தப்பாமல் வுருக்கிப்பாரு பேரான பொன்னதுவும் எழுமாமே

விளக்கவுரை :


2675. ஏழான பொன்னதுவும் என்னசொல்வேன் என்மகனே வாரடித்து புடத்தைப்போடு
ஆழான பொன்னதுவும் மாற்றுமெத்த அப்பனே பிறவியது பொன்போலாகும்
கூழான பொன்னதுவும் அல்லகண்டீர் குணமான சித்தர்செய்யும் வேதையாச்சு
நீழான ரிஷிமுனிவர்களுக்குவேதை நேர்மையுடன் காண்பவனே சித்தனாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar