போகர் சப்தகாண்டம் 2506 - 2510 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2506 - 2510 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2506. உண்மையா மின்னமொரு பாகங்கஏளு வுத்தமனே வஸ்துவென்ற போதையப்பா
திண்மையாய் நெல்லிவேர் பனையின்வேரும் திறமான மாதளையின் கெஞ்சாவேறும்
கண்மையாம் நன்னாரி யலரிவேறும் கருவான வாவாரை வேறுதானும்   
பண்மையாம் கிச்சிலியின் வேறுகூட்டி பாங்கான வேலனிட பட்டைகூட்டே

விளக்கவுரை :


2507. கூட்டியே வெள்வேலன் பட்டைதானும் குணமான சரிஎடையா எடுத்துக்கொண்டு
மாட்டியே பெரும்பாண்டம் தன்னிலிட்டும் மதிப்புடனே ஜலமதுவும் நிறம்பவிட்டு
வாட்டமுடன் பத்தநாள் ஊறிப்பின் வகுப்புடனே சரக்கதனில் பனவெல்லந்தான்
நீட்டமுடன் தான்போட்டு யடுப்பிலேற்றி நிலைமையுடன் திராவகமா யிறக்கக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

2508. இறக்கவென்றால் வாலையது திராவகத்தை எழிலான பாண்டமது இறக்கிப்பாரு
சிறக்கவே திராவகமும் காரமெத்த சீரான திராவகமும் பதனம்பண்ணு
முறைக்கவே வஸ்துசுத்தி சரக்குதன்னை முய்யவே நாதாக்கள் செய்யமாட்டார்
திறக்கவே பலநூலும் கண்டாராய்ந்து தீரமுடன் பாடிவைத்தேன் மாந்தர்க்காமே

விளக்கவுரை :


2509. ஆமேதான் சரக்குசுத்தி கொண்டபோது அப்பனே வருளுண்டு ஞானமுண்டு
தாமேதான் நாதாக்கள் மனமுவந்து தயையுடனே வேணதெல்லாம் ஈவார்பாரு
போமேதான் புகழுண்டு செல்லமுண்டு பொலிவான கருணையுடன் வரமுமுண்டு
வேமேதான் மனமுவந்து விருப்பமுடன் பட்சமது வைப்பார்பாரே

விளக்கவுரை :


2510. தானான சதாநிலையைக் காணலாகும் தாக்கான சின்மயத்தை யறியலாகும்
வேனான வறுகோண வட்டத்துள்ளே வேண்டியதோர் கருவிகரணாதியெல்லாம்
மானான வாராதாரத்திலுண்மை மார்க்கமுடன் காணுதற்கு மயக்கமில்லை
கோனான சிற்பரத்தை யடுக்கலாகும் கொற்றவனே தவநிலையில் நிற்பதாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar