போகர் சப்தகாண்டம் 2841 - 2845 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2841 - 2845 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2841. அத்தியுடன் துத்தியது ரண்டதாகும் அப்பனே வட்டமென்ற துத்திதானும்
மத்தியாந் தட்டமென்ற துத்திதானும் மன்னவனே மிளகதுவும் ரண்டதாகும்
சுத்தியாம் நன்மிளகு வால்மிளகுதானும் துரையான கருஞ்சூரையப்பா
வெத்திபெற வலம்புரியுமிடம்புரியுமாகும் வேகமென்ற வேப்பிலையு மிரண்டதாமே

விளக்கவுரை :


2842. தாமான கருவேப்பிலையுமாகும் தாக்கான மலையின்வேப்பிலையுமாகும்
தூமான மழிசியது ரண்டதாகும் துவர்ப்பான பேரழிஞ்சி யிரங்கழிஞ்சியாகும்
காமான வேளையது ரண்டதாகும் கதிப்பான நல்வேளை முக்காவேளை
நாமான ஓமமது ரண்டதாகும் நலமான குரோசானி நல்லோமமாமே

விளக்கவுரை :

[ads-post]

2843. ஓமமுடன் பிரண்டையது ரண்டதாகும் உத்தமனே நற்பிரண்டை ஒற்றையப்பா
தாமென்ற வாலிலையு மிரண்டதாகும் தாக்கான கல்லாலை நல்லாலையப்பா
நேமமுடன் கள்ளியது ரண்டதாகும் நெடிதான கொடிகள்ளி கொம்புகள்ளி
காமமென்ற வூமத்தை ரண்டதாகும் கருவான வூமத்தை மருளூமத்தையாமே

விளக்கவுரை :


2844. மத்தையுடன் வுள்ளியது ரண்டதாகும் மகத்தான வெள்ளுள்ளி யீருள்ளியப்பா
சத்தான தாமரையுமிரண்டதாகும் சார்வான குழித்தாமரை நற்றாமரைதானும்
முத்தான திப்பிலியும் ரண்டதாகும் முனையான யானையின் திப்பிலியுமாகும்
சத்தான வரிசையிட திப்பிலிதானும் சார்பான நிலாவிரையும் இரண்டதாமே

விளக்கவுரை :


2845. தாமேதான் சூரத்துவிரையுமாகும் தாக்கான நாட்டிலுள்ள விரையுமாகும்
வேமேதான் சரையதுவு மிரண்டதாகும் வெடிப்பான நற்சுரையும் பேய்ச்சுரையுமாகும்
நாமேதான் சொன்னபடி கொன்றைரண்டு நற்கொன்றை மயிற்கொன்றை ரண்டதாகும்
போமேதான் சீந்தியது ரண்டதாகும் பொற்சீந்தி தானுஞ்சேரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar