போகர் சப்தகாண்டம் 2491 - 2495 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2491 - 2495 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2491. ஓடயிலே முதற்றரந்தன்னில் வொளிவான காகிதங்கள் சன்னமாகும்
நீடமுடன் இரண்டாங்கால் ஆலைதன்னில் நேர்புடனே தானடைக்கும் வண்மைபாரு
சாடலுடன் பஞ்சியென்ற வாலையுண்டு சட்டமுடன் முன்குழைபோலாணித்தூணாம்
வாடலுடன் குளமதனில் வண்டல்சேரும் வாகுடனே பனாசியென்ற வண்டல்தானே

விளக்கவுரை :


2492. வண்டலுடன் சுத்தித்த பூநீரப்பா வாகுடனே தான்சேர்ந்து குழம்புபோலாம்
அண்டமெனும் நட்சத்திர வொளிவுவீசும் அப்பனே வண்டல்தனைகலக்கிக்கொண்டு
தண்டமுடன் சக்கரவாலைதன்னை சாங்கமுடன் தான்திருப்பிரதமைதானும் கொண்டபடிபடல்சாத்தி
வண்டல்தன்னை கொப்பனவே தானெடுக்கும் வண்மைபாரே

விளக்கவுரை :

[ads-post]

2493. பார்க்கையிலே படல்சாத்தி தானெடுத்து பாகமுடன் மேற்புரத்தில் கொண்டுசென்று
திர்க்கமுடன் சட்டமென்ற படலின்மேலே சீலைகொண்டு அப்பனே மேல்மூடியாலையாலே
நீக்கலது படலதனை மேலேசாத்தும் நெடிதான சக்கரத்தின் நேர்மைகாணே

விளக்கவுரை :


2494. காணயிலே சக்கரமா மாலைதன்னில் கருத்துடனே தான்முடுக்கச் சலமும்நீங்கி
நீணமுடன் கசுவலது நீங்கியேதான் நேரான காயிதமும் சன்னமாச்சு
வேணபடி மூன்றாங்காலாதன்னில் வேகமுடன் திருப்ப உபாயங்கேளு
மாணவென்ற சக்கரமுமாடிநிற்கும் மன்னவனே நடுக்குளமாங் குழிதான்பாரே

விளக்கவுரை :


2495. குழியான சதுரமது பள்ளத்துள்ளே கூரான நுணதுதான் நடுமையத்தில்
வழியான சக்கரமாமாலைதன்னில் வகுப்பான பஞ்சினுட மஷ்டுதன்னால்
முழியான பூநீறு மொக்கச்சேர்த்து முயலவே தான்மசிந்து குழிக்குள்தானும்
கழியான மயினம்போலாகும்பாரு கருத்துடனே தானெடுக்கும் கருவைக்கேளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar