2886. ஆக்கினார் இடைக்காட்டார்
தன்னைக்கண்டேன் அப்பனே யவர்செய்தவினைதான்கேளு
பாக்கியங்கள் அனேகமதாய்க்
கொண்டுயென்ன பாருலகில் சிவதருமமில்லையப்பா
நோக்கமுடன் அவர்செய்த
பூர்வபுண்ணியம் நொடிக்குள்ளே ராசனவன் கண்டாராய்ந்து
தாக்கவென்ற அவர்மீதில்
பட்சம்வைத்து கஷ்டமில்லா வாக்கினைக்குள் சென்றிட்டாரே
விளக்கவுரை :
2887. சென்றவுடன் சிவவாக்கியர் தன்னைக்கண்டேன் சிறப்புடனே யவர்தம்மை கேள்விகேட்டார்
ஒன்றுமில்லை யவர்மீதில்
குற்றமில்லை உத்தமனே வைகுண்டப்பதியில்தாமும்
குன்றின்மேலிக்
கொடுத்தார்தூதர்தாமும் கொப்பெனவே சாமிக்குத் தொண்டனாக்கி
வென்றிடவே சதாகாலம்
கைலாசத்தில் வேகமுடன் வீற்றிருக்க கெடுவுண்டாச்சே
விளக்கவுரை :
[ads-post]
2888. ஆச்சப்பா மிரமமுனி
தன்னைக்கண்டேன் அப்பனே யவர்செய்த கொடுமைகேளும்
மூச்சடங்கி பிணம்போல
இருந்தசித்தன் முடிமீதில் ஜெபமாலையணிந்துகொண்டு
பாச்சலுடன் வெகுதேசம்
வோடிச்சென்று பாடுபட்டு திரவியங்கள் சேகரித்து
பாச்சலுடன் சாத்திரங்கள்
படித்துக்கொண்டு மாறாட்டமாகவல்லோ மறைந்தார்தாமே
விளக்கவுரை :
2889. மறைத்த பொருள் ஆனதினால்
சித்துதம்மை மார்க்கமுடன் வைகுண்டந் தன்னிற்சென்று
குறைந்ர பொருள்வுளவுகளை
மறைத்ததாலே கோடான கோடிபாவம் சேர்ந்ததென்று
நிரைத்தனமாய்
தன்மனமெண்ணலானார் நேர்மையுடன் வைகுண்டபதியின்சேதி
முறைப்படியே செய்யவென்று
தூதர்தாமும் முயன்றுமே வாக்கினைகள் செய்திட்டாரே
விளக்கவுரை :
2890. செய்யவே கமலமுனி
தன்னைக்கண்டேன் சேர்வைமுகம் காணுகையிலடியேன்பக்கம்
பையவே தீர்ப்புமிகச்
செய்யக்கண்டேன் பாழ்நரகில் சிலபேர்கள் இருக்கக்கண்டேன்
தொய்யவே காலனவன் கிருபைவைத்து
துப்புரவாய் எந்நாளுந் தருமஞ்செய்ய
மெய்யுடனே
தீர்ப்புரைக்கண்டேன் யானும் மேதினியில் சொன்னாலும்பொய்யென்பாரே
விளக்கவுரை :