2566. செய்யவே புடமதுதான் கோழியாக
செப்புகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
உய்யவே பத்துபுடம்
இப்படியேபோடு உத்தமனே பின்னாலே சாற்றக்கேளு
பையவே சூதமென்ற ராஜாதன்னை
பாகமுடன் சரிகாலால் சேர்த்துக்கொண்டு
நையவே தானரைப்பாய்
முன்மூலியாலே நயமுடனே பில்லைதட்டி காயப்போடே
விளக்கவுரை :
2567. காய்ந்தபின்பு
தானெடுத்துமாணாகேளு கருவாக தளவாயாஞ் சட்டிதன்னில்
ஆய்ந்ததொரு வுப்பதனை
மைபோலாக்கி வப்பனே சட்டிதனில் கீழேபோட்டு
மாய்ந்தலுடன் பில்லைதன்னை
நடுமையத்தில் மார்க்கமுடன் தானமைத்து மன்னாபாரு
பாய்ந்தலுடன் மேலுமந்த
வுப்பைக்கொட்டி பதமுடனே சீலையது வலுவாய்ச்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
2568. செய்துமே வாலுகையிலி
அடுப்பிலேற்றி செம்மெயுடன் தானெரிப்பாய் ஆறுசாமம்
பெய்துமே யாறினபின்
னெடுத்துப்பாரு பேறான செந்தூரம் முருக்கம்பூவாம்
நைதுமே
செந்தூரமெடுத்துப்பாரு நாதாக்கள் முறையதுதான் சொல்லப்போமோ
கொய்துமே செந்தூரம் பதனம்பண்ணு
கொப்பெனவே வேதைமுகம் செப்பக்கேளே
விளக்கவுரை :
2569. செப்பவென்றால் செந்தூரம்
வெள்ளியாறு சிவப்பான செம்பதுவும் செம்புநாலு
ஒப்பவே தங்கமது ஒன்றுகூட்டி
வுவமையுடன் தானுருக்கி குருவொன்றீய
மெப்பவே கரிபோல
இருக்கும்பாரு மேன்மையுடன் காரமிட்டு வூதிப்போடு
அப்பவே பொன்னுமது
மாற்றுகாணும் அப்பனே எட்டரையு மாகுந்தானே
விளக்கவுரை :
2570. அதிகமா மின்னமொரு
கருமானங்கேள் அப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று
துதீதமுடன் நீதமது
நவநீதந்தான் சுத்தமுடன் வெண்ணெயது எடுத்துப்பாரு
கதீதமுள்ள வெண்ணையது
சேர்தானொன்று கருவாக வெடியுப்பு சேர்தானொன்று
புதீதமுள்ள கெந்தியது
சேர்தானொன்று புகழாக எருக்கன்பால் தன்னாலாட்டே
விளக்கவுரை :