2551. கோடியாம் வேதையிது கோடாகோடி
கொட்டினேன் மாணாக்கள் பிழைக்கவென்று
நீடியே நிமிளைதனைக்
காணமாட்டார் நிமிளையில் வர்ணமதைக் அறியமாட்டார்
மூடியே பித்தளைபோல்
கல்லுமப்பா முறுக்கலுடன் சிட்டம்போல் இருக்கும்பாரு
தேடியே மலைந்தானும்
கிட்டாதப்பா தேசத்தில் வதீதமென்ற சிட்டம்பாரே
விளக்கவுரை :
2552. சிட்டமுடன் கல்லதனை
செந்தூரித்தால் சிவப்புடனே தங்கமது செந்தூரந்தான்
கிட்டநிமிளையது வர்ணமெத்த
கெடியான செந்தூரங் குன்றியுண்ணு
குட்டமென்ற தேகமது
பொன்போலாகும் குறையாது வயதுதான் செவினியாய்
மட்டமுடன் வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்று மயங்காமல் கொடுத்திடவே மாற்றெட்டாமே
விளக்கவுரை :
[ads-post]
2553. எட்டான மாற்றதுவு மதிகமாகி
எழிலான புடத்துக்கு வுறுதிதங்கம்
மட்டான சங்கமது பசுமையாகும்
மகத்தான வேதையிது சித்தர்வேதை
கட்டான நிமிளையது கருவுவேதை
காசினியில் ஆருந்தான் சொல்லமாட்டார்
சட்டமுடன் காலாங்கிதனைவணங்கி
சார்புடனே போகரிஷி பாடினேனே
விளக்கவுரை :
2554. பாடவே மாற்றுயர்வு பகரக்கேளு
பாங்கான துருசதுவும் பலமோவொன்று
நீடவே துருசுக்கு
சுண்ணாம்பப்பா நிலையான சுண்ணமதைக் கவசம்செய்து
தேடவே மூன்றுநாள்
காய்ந்தபின்பு தெளிவுடனே காடையென்ற புடத்தைப்போடு
கூடவே கவசமதை பிரித்துப்பாரு
கொற்றவனே துருசதுவும் வெளுக்கும்பாரே
விளக்கவுரை :
2555. பாரேதான் துருசதுவும்
ஒன்றேயாகும் பாங்கான லிங்கமது ஒன்றேயாகும்
சீரேதான் சூதமது ஒன்றேயாகும்
சிறப்பான காரமது ஒன்றேயாகும்
நேரேதான் எலிக்காலின்
தழையினாலே நேர்புடனே தானரைப்பாய் நாலுசாமம்
சீரேதான் சிமிழ்தனிலே
பதனம்பண்ணு திறமான மட்டமென்ற பொன்னிற்போடே
விளக்கவுரை :