போகர் சப்தகாண்டம் 2711 - 2715 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2711 - 2715 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2711. கொள்ளையிலே குருவர்க்கம் சீஷனென்பார் குவலயத்தில் உம்மகிமைகாணமாட்டார்
தெள்ளுதமிழ் வடமொழியைப் பிரித்தாராய்ந்து திரட்டிவைத்த மாணாக்கனென்பார்கண்டீர்
பள்ளிபயிலேறுஞ் சுப்ரமணியன் சுவாசம் பூரணத்தின் இருகலைகள் அறிந்துநன்றாய்
பள்ளுதமிழ் நாடகத்தைப்பற்றான் பாருலகிலிருப்பவன் சித்தனாமே

விளக்கவுரை :


2712. சித்தனாய்ப் பிறந்தாலும் பிறக்கவேண்டும் சின்மயத்தின் சுடரொளியைப் பற்றவேண்டும்
பத்தனாயிருந்தாலும் என்னலாபம் பரியாகத் தமிழதனை கற்கவேண்டும்
முத்தமிழில் வல்லவராயிருக்கவேண்டும் மூதுலகில் கீர்த்தஇதனை யடையவேண்டும்
வித்தகனார் அகத்தியர்க்குச் சீடனாக விண்ணுலகில் இருப்பவனே யோகியாமே

விளக்கவுரை :

[ads-post]

2713. யோகமென்றால் யோகமதை நிறுத்தவேண்டும் யோகத்தின் ரம்மியத்தை யறியவேண்டும்
போகமெனும் மாய்கைதனை ஒழிக்கவேண்டும் யோகமுடன் பேரின்பந் தேடவேண்டும்
சாகமுடன் இருப்பதற்கு கற்பம்வேண்டும் சட்டமுடன் சமாதிநிலை யறியவேண்டும்
வேகமுடன் காயமதை நிறுத்தவேண்டும் வெட்டவெள் யம்பரத்தை யூனிப்பாரே

விளக்கவுரை :


2714. பார்க்கையிலே ஞானமது வந்துறாது பாரினிbலெ பரிசனங்கள் கெட்டார்கோடி
தீர்க்கமுடன் பொய்வேடங் கொண்டுமல்லோ திறமுடனே யோகமதைக் கண்டோமென்பார்
நாக்கமல பீடமதில் வீற்றிருக்கும் நாதாந்த மனோன்மணியைக் கண்டோமென்பார்
ஏர்க்கமுடன் பொய்யது மிகவும்பேசி எழிலான சாத்திரத்தை அறியார்தாமே

விளக்கவுரை :


2715. அறியாத முழுமக்கள் அனேகம்பேர்கள் அவனிதனில் கும்பல்கும்லாகக்கூட்டி
நெறியான வழிதனையே கடந்துநித்தம் நேர்புடனே மதியழிந்து போனார்கோடி
குறியான சாத்திரத்தை விட்டுவிட்டு குவலயத்தில் கெட்டவர்கள் கோடாகோடி
முறியனைப் போல்வாய்ப்பினத்தல் மிகவும்பேசி மோசமுடன் பாலவழிக்கேகினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar