2931. சரிதையுடன் சித்தர்முனி கோர்வையாவும் தப்பென்று தான்மிகவும் வெகுசாய்க்கூறி
கருதிபொருளாராய்ந்து
சூட்சாசூட்சம் சுத்தமுடன் தானறிந்து தன்தன்நூலை
விரிவுடனே பாடிவிட்டார்
வனந்தங்கோடி விண்ணுலகும் மண்ணுலகுங் கொள்ளாதப்பா
பரிவுடனே சொன்னதுபோல்
தானுஞ்சொல்லி பட்சமுடன் தாமுரைத்தார் மாணாக்கராமே
விளக்கவுரை :
2932. மாணாக்கர் வின்நூலை
மெய்யென்றெண்ணி மானிலத்தில் வெகுநாளாய் கண்டாராய்ந்து
வஆணாக சாத்திரத்தின்
கோர்வைபார்த்து விருதாவாய் சுட்டலைந்து பொருளுந்தோற்று
கோணாமல் பருந்தினது
பாகங்காணார் குவலயத்தில் மெய்பொருளை பொய்ப்பொருளதாக்கி
வாணாளை தான்கழித்து
மட்டிமாண்பர் மதிகெட்டு நின்றார்கள் மகிமைபாரே
விளக்கவுரை :
[ads-post]
2933. பாரேதான் முப்பூவைக்
கெடுத்துப்போட்டார் பலபலவாம் நூல்தோறும் பாடிப்போட்டார்
நேரேதான் விதிமுறைகள்
யாவுங்கூறி விதிமுடிக்கும் முறையனைத்துங்குரைத்துப்போட்டார்
சீரேதான் சாத்திரத்தை
மெய்யென்றெண்ணி சிறப்புடனே முப்பூவை முடிக்கவென்று
கூரேதான் சட்டமுனி
மெய்யாய்ச்சொல்லி குறிப்புடனே நூலதனை மாத்திட்டாரே
விளக்கவுரை :
2934. மாத்தியே கலவரங்கள்
மிகவுண்டாகி மன்னவர்கள் தான்மயங்க மறைத்துச்சொல்லி
நேத்தியுடன் பாடல்களை
மெய்போல்சொல்லி நேர்மையுடன் திரவியங்கள் பாழாய்செய்து
தூத்தியே வாதத்தை
மெய்போல்சொல்லி முறையோடு பொய்சொல்லி துகளகற்றி
சாத்திரத்தைப் பாடினதால்
சட்டையோர்க்கு சாபமுடன் வைகுண்டபதியில் தீதே
விளக்கவுரை :
2935. தீதான சாத்திரத்தைக்
கெடுத்ததாலே தீங்கஉமிக நேர்ந்தது வைகுண்டத்தில்
நீதமுடன் வாக்கினைகள்
மிகவுண்டாகி நித்தியமும் வைகுண்டச்சார்புதன்னில்
காதமது வான்வாசல்
கோட்டைக்குள்ளே கால்நடையாய் தாநடந்துசுத்திவந்து
போதமுடன் விசாரணைக்குத் தீமுன்பாக
பொங்கமுடன் கொண்டுவந்து நிறுத்தினாரே
விளக்கவுரை :