போகர் சப்தகாண்டம் 2606 - 2610 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2606 - 2610 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2606. போடேதான் மூன்றுநாள் சென்றபின்பு பொங்கமுடன் தானெடுத்து தேனில்தானும்
நீடவே மூன்றுநாள் ஊறப்போடு அப்பனே லிங்கமது சுத்தியாச்சு  
கூடவே லிங்கமதை வின்னுமப்பா குமுறவே வெள்ளுள்ளிச் சாற்றினாலே
ஆடவே மூன்றுநாள் வூறப்போடு அப்பனே லிங்கமது சுத்தியாச்சே  

விளக்கவுரை :


2607. ஆச்சென்று விடுகாதே மன்னாகேளு அப்பனே லிங்கமதை யெடுத்துக்கொண்டு
பாச்சலென்ற யெரிகாலன் பாலினாலே பாங்குபெற நாற்சாமம் சுறுக்குதாக்கு
காச்சலுடன் லிங்கமது கட்டிப்போகும் கருவான லிங்கமது வேதையாகும்
பேச்சில்லை வவதைமுகம் யாருங்காணார் பேரான லிங்கத்தின் போக்குதானே

விளக்கவுரை :

[ads-post]

2608. போக்கான லிங்கத்துக் குறுதிசொல்வேன் பொலிவான வெள்ளியது யாறுமாறும்
தாக்கான செம்பதுவும் நாலுமாகும் தகைமையுடன் தானுருக்கி குருவொன்றீய
தூக்கான நிரையுடனே பாரங்காணும் துறையோடும் முறையோடும் வூதிப்போடு
காப்பான வெள்ளியது நிற்கும்பாரு கனகமது மாற்றதுவும் ஆறுமாமே

விளக்கவுரை :


2609. ஆறான மாற்றதுவும் மிகவுமாகி அப்பனே புடத்துக்கு வுறுதிதங்கம் 
வாறான வாரடித்துப் புடத்தைப்போட வளமையுடன் தங்கமது இறங்கும்பாரு
கூறான தங்கமது என்னசொல்வேன் கொற்றவனே சிவயோகி வுறுதிகாண்பான்
நேரான தங்கமது பிறவியென்பார் நேர்மையுடன் செய்பவனே வாதியாமே

விளக்கவுரை :


2610. வாதியா மென்றதற்கு வகுப்புகேளு வாகான லிங்கமதை கொடுக்கக்கேளு
சோதியா மேனியது சுரமுங்கண்டால் துப்புரவாய் சன்னிமுதல் வாயுபோகும்
பாதிமதி சடையணிந்த தம்பிரான்மேல் பத்தியுடன் சத்தியமாய் சொல்லிட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar