போகர் சப்தகாண்டம் 2716 - 2720 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2716 - 2720 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2716. கினாரென்லுமே யாமறிந்து எழிலுடனே காலாங்கிநாதர்தம்மை
பாகமுடன் தான்வணங்கி பணிந்துபோற்றி பதாம்புயத்தை என்னாளும் மனதிலுண்ணி
வேகமுன் அடியேனும் பலநூல்பார்த்து வெளியான கருக்குருவும் வுரைக்கயெண்ணி
போதமென்னும் பெருநூலேழாயிரத்தில் பொங்கமுடன் பாடிவைத்தேன் கருக்கள்தானே

விளக்கவுரை :


2717. தானான பெருநூலேழாயிரத்தில் தாக்கான காண்டமிது மூன்றாங்காண்டம்
தேனான குருமொழிகள் அனேகமுண்டு தேசத்தில் பரிபாஷை யனேகமுண்டு
மானான மறைப்புமுதல் உளவுமெத்த மண்டலத்தில் கண்டவரும் விண்டோரில்லை
கோனான காலாங்கி நாதர்தாமும் கனகமெனும் நவமணிபோல் கருதினாரே  

விளக்கவுரை :

[ads-post]

2718. கருதினார் அடியேனுங் கண்டாராய்ந்து காசினியில் மானிடர்கள் அறியவேண்டி
சுருதியென்னும் பிரணவத்தைச் சீனத்தார்க்கு சூட்சமுடன் காட்டவென்று அடியேன்தானும்
பருதியெனும் குளிகைதனைப் பூண்டுகொண்டு பறந்தேனே சீனபதிக்கடலோரந்தான்
உருதியுடன் அப்பதியில் இறங்கியானும் ஓகோகோ வெகுகாலம் இருந்திட்டேனே

விளக்கவுரை :


2719. இருந்திட்டேன் கோடிவரையுகாந்தகாலம் எழிலான சூட்சாதி வித்தையாவும்
திருந்திடவே சீனபதி வுலகுள்ளோர்க்கு திட்டமுடன் கைமறைப்பு யாவுஞ்சொன்னேன்
பொருந்திடவே யவர்களுடன் சேர்ந்துயானும் போகித்தேன் வெகுகோடி காலமப்பா
செருந்திடவே போகமது செய்ததாலே சிறப்பான போகனென்று பேருண்டாச்சே 

விளக்கவுரை :


2720. ஆச்சப்பா என்னைப்போல் பெயருள்ளார் அப்பனே வையகத்திலாருமில்லை
மாச்சலென்னும் நவகோடி ரிஷிகளுண்டு மாநிலத்தில் பதினெண்பேர் சித்தருண்டு
கூச்சலெனும் திருமூலவர்க்கத்தார்கள் கோடானகோடிபே ரனந்தமுண்டு
மூச்சடங்கி மாண்டசித்தர் கோடாகோடி முறைமையுடன் சமாதிகளில் கோடியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar