போகர் சப்தகாண்டம் 2856 - 2860 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2856 - 2860 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2856. புரிந்திட்ட காயமது மூச்சடங்கி பொங்கமுடன் வெகுகோடி காலந்தானும்
பரிந்திட்ட மாகவல்லோ சமாதிதன்னில் பரிதிமதி காணாமல் இருந்தாரப்பா
சரிந்திட்ட மாகவல்லோ சரிகைதன்னை சாக்கிரதை சுழுத்தியுடன் கிரியையொடு
திரிந்திட்ட துரியாதி தாமும்பூண்டு துப்புரவாய் மண்மறைவில் இருந்தார்தாமே

விளக்கவுரை :


2857. தாமான காயாதிவுண்டைதன்னை தற்காலம் மானிடர்கள் கொண்டாரானால்
பூமான்கள் வெகுகோடி காலமப்பா பூவுலகில் தானிருப்பார் வயதோமெத்த
சீமானகள் காயாதி உண்டிட்டாலும் சீர்பெறவே மாய்கைதனை ஒழிக்கவேண்டும்
நாமானவாயுரு வேதந்தன்னை நாட்டினேன் மாணாக்கள் பிழைக்கத்தானே

விளக்கவுரை :

[ads-post]

2858. தானான கற்பமது உண்ணும்போது தகைமையுடன் புளிபுகையுந் தள்ளவேண்டும்
வேனான கற்பமது கொண்டபோது வேகமுடன் வாசியது கீழ்நோக்காகும்
கோனான மண்டலந்தான் கொண்டாயானால் கொடுங்காசை மீளையது தொண்ணூற்றாரும்
மானான வாதமென்ற தென்பதும்போம் மதிப்புடனே பித்தம்நாற்பதுவும் போமே

விளக்கவுரை :


2859. போமேதான் மேகமது இருபத்தொன்று பொலிவான கிரந்தியது பதினெட்டும்போம்
வேமேதான் சூலைபதினெட்டும்போகும் விருப்பமுடன் குன்மமென்ற தெட்டும்போகும்
நாமேதான் சொன்னபடி பாண்டாறும்போம் நாடாது விஷவலியும் நவிலொண்ணாது
சாமேதான் சன்னிபதிமூன்றும்போகும் சார்பான கக்கலுடன் வாந்திபோமே

விளக்கவுரை :


2860. வாந்தியாம் விக்கலுடன் வரோசிகம்போம் வகுத்ததொரு பீனசமுமெட்டும்போகும்
காந்தலெனும் தேகமது குளிர்ச்சி காணும் கண்கூச்சம் பெருமூச்சு காணாதோடும்
பாந்தலெனும் பாணமது போலாம்நோய்கள் பறக்குமடா தேகமதிற் சன்னலாகி
சாந்தமுடன் எந்நாளும் தளிர்ச்சிகாணும் சதாகால மெந்நாளும் கற்றூணாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar