போகர் சப்தகாண்டம் 2421 - 2425 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2421 - 2425 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2421. கலந்துமே வதிற்போடு கற்பங்கேளு கருவான திப்பிலியும் கடுகுதானும்
அலர்ந்த கடுக்காயுடனே கடுகுரோணி அப்பனே வால்மிளகுசிரந்தானும்  
மலர்ந்ததோர் வால்மிளகு குரோசானிதானும் மார்க்கமுடன் கருஞ்சீரம் கஸ்தூரிமஞ்சள்
நிலர்ந்த மஞ்சள்தன்னுடனே வரத்தைகூட்டி நெடிதான சுக்குடனே சிறுநாகப்பூவே

விளக்கவுரை :


2422. பூவான இந்துப்பு திப்பிலிதானும் பொங்கமுடன் பெருங்காயாம் சாதிக்காயாம்
மாவான சாதிக்காய் சாதிபத்திரி மாற்கமுடன் சேங்கொட்டை தாளிசந்தானும்
சேவான சிவதைநில வாசைவேறும் சிறப்பான கோரையிட கிழங்குதானும்
காவான சுக்குடனே தான்றிக்காயும் கருவான நெல்லியுடன் ஓமந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2423. ஓமமுடன் வாய்விளங்கம் விடையந்தானும் ஒப்பமுடன் மாசியென்ற காயுங்கூட்டு
தாமமுடன் வகைக்குஒரு பலமதாக தகைமையுடன் தானிடித்துக் கூடப்போடு
வாமமுடன் அடுப்பேற்றி எரிக்கும்போது வாகான வெண்காரம் விராகனொன்று
தூமமுடன் இந்துப்பு விராகன்ரண்டு சுயமான கரியுப்பு விராகனொன்றே  

விளக்கவுரை :


2424. ஒன்றான யிவையெல்லாம் பொடித்துப்போட்டு வுத்தமனே மெழுகுபதந்தனிலிறக்கி
நன்றான கலசத்தில் பதனம்பண்ணு நலமாக மணடலஞ்சென்றெடுத்துக்கொண்டு
தன்றான வீட்டுக்கு விலக்கமான தயவான முதநாள்தான் மூன்றுநாளும்
குன்றாமல் காலையிலே ஓராண்டுகொள்ள குணமாகும் ஆறுவித சூலைபோமே

விளக்கவுரை :


2425. போமேதான் கற்பமென்ற சூலைபோகும் பொல்லாத கெற்பத்தின் வாயுபோகும்
தாமேதான் கெற்பத்தின் ரோகம்போகும் தனியான கெற்பத்தின் திரட்சிபோகும்
வேமேதான் சூதகத்தின் வாயுபோகும் வெகுளாமல் குன்மத்தின் கட்டிபோகும்
நாமேதான் சொன்னபடி பத்தியந்தான் நலமான வெள்ளாட்டுப்பால்தான் கூட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar