போகர் சப்தகாண்டம் 2586 - 2590 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2586 - 2590 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2586. வாங்கியே ஜலமென்னும் செயநீராலே வளமையுடன் தானரைப்பாய் பத்துநாள்தான்
தூங்கியே திரியாதே மைந்தாபாரு துரையுடனே மைபோல வரைத்துமேதான்
ஏங்கியே போகாமல் பில்லைதட்டி எழிலாக ரவிதனிலே காயவைத்து
ஓங்கியே ஓட்டிலிட்டுச் சீலைசெய்து வுத்தமனே கோழியென்ற புடத்தைப்போடே

விளக்கவுரை :


2587. புடமதுதான் ஆறியபின் எடுத்துப்பாரு புகழான கல்லுப்பு கட்டிப்போகும்
திடமுடனே பின்னுமந்த செயநீராலே தீவிரமாய் தானரைப்பாய் நாலுசாமம்
தடமுடனே மைபோலவரைத்துபாலா சார்புடனே பில்லைதட்டி காயவைத்து
மடமுடனே ஓட்டிலிட்டுச் சீலைசெய்து மயங்காமல் முன்போல புடத்தைப்போடே

விளக்கவுரை :

[ads-post]

2588. போடவே புடமதுதான் ஆறிப்பின்பு பொங்கமுடன் தானெடுத்துப் பார்க்கும்போது
நீடவே பற்பமது என்னசொல்வேன் நிலையான நீருக்கும் அனலுக்குமேகா
சூடவே பின்னுமந்த செயநீராலே சூட்சமுடன் பத்துபுடந் தீர்ந்தாயானால்
தேடவே பற்பமது என்னசொல்வேன் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கே

விளக்கவுரை :


2589. சிவயோகி என்றாலே மெத்தவுண்டு சிவன்தனையே கண்டவர்போல் வார்த்தைசொல்வார்
தவயோகிபோல் ஒருவேஷம் பூண்டு சர்வகலை யறிந்ததொரு ஞானிபோல்
பவங்கண்ட ரிஷியென்று பெயருங்கொண்டு பாரினிலே பசப்பியல்லோ பொருள்தான்கொள்வார்
சவம்போல மூச்சிதனை யடக்கிக்கொண்டு தாரணியில் பிர்மைகொள்ள நடப்பார்தாமே

விளக்கவுரை :


2590. தாமான பற்பத்தை செய்யமாட்டார் தாக்கான சருக்குருவைக் காணமாட்டார்
பேமானிபோல வெகுபேச்சி சொல்வார் பேச்சிக்கு முன்பாக பாட்டுசொல்வார்
சாமானிய புருஷனென்று வார்த்தைச்சொல்வார் சாற்றலுடன் தூஷணைகள் மிகவுஞ்சொல்வார்
நாமான சாத்திரங்கள் அதிகம்பேசி நாணியே தலைகுனிந்து நடுங்குவாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar