2851. காணவே வாவாரை ரண்டதாகும்
கருவான பொன்னினா வாவாரையாகும்
தோணவே நல்லவாவாரையாகும்
தோறாமல் கூட்டுவது மெத்தநன்று
சாணவே வாமணக்கு ரண்டதாகும்
சாங்கமுடன் சிற்றினாமணக்குதானும்
வேணவே பெரியவாமணக்குமாகும்
மேதினியில் கண்டறிந்து கூட்டுவாயே
விளக்கவுரை :
2852. கூட்டுவாய் வகைவகைக்கு
சேரொன்றாக குறிப்பாக யினங்கண்டு சேர்வைகண்டு
மாட்டுவாய் விதித்தினுட
பாகங்கண்டும் மதிப்புடனே மூலியுட பதமுங்கண்டு
நீட்டுவாய் பட்டையுட
அளவுங்கண்டு நேர்புடனே சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூட்டி
வாட்டமுடன் தானிடிப்பாய்
சரக்கையெல்லாம் வாகுடனே தான்போட வளமைகேளே
விளக்கவுரை :
[ads-post]
2853. கேளேநீ பாண்டமமில்
இட்டுமைந்தா கிருபையுடன் பேரீச்சங்காய்தானப்பா
மாளேநீ கொடிமுந்திரி
பழமுந்தானும் மார்க்கமுடன் வகைக்கு ஒருசேரதாக
வாளேதான் மலைத்தேனும்
கூடச்சேர்த்து வளமுடனே கற்கண்டு சரியாய்ச்சேர்த்து
பாளேதான் போகாமல்
ரவியில்வைத்து பாகமுடன் சீசாவில் பதனம்பண்ணே
விளக்கவுரை :
2854. பண்ணவே காயாதிகற்பவுண்டை
பாருலகில் நாதாக்கள் ரிஷிகள்தாமும்
வண்ணமுடன் மாணாக்கள்
பிழைக்கவென்று வாகுடனே சீனபதிதேசத்தாற்கு
திண்ணமுடன் இப்பாகம்
செய்துவைத்தேன் திறமையுடன் காயாதிகற்பந்தன்னை
நண்ணமுடன் வுண்டுமல்லோ
மாந்தர்தாமும் மானிலத்தில் சித்தரைப்போ லிருந்திட்டாரே
விளக்கவுரை :
2855. இருந்திட்டார் வெகுகோடி
காலமப்பா எழிலான சித்தர்முனி தம்மைப்போல
குருந்திட்ட
சமாதிதனிலிருந்துகொண்டு குருவான போகரைத்தான் மனதிலெண்ணி
திருந்திட்ட
சிவயோகந்தன்னிற்சென்று தீரமுடன் காயத்தை நிருத்திக்கொண்டு
பொருந்திட்ட மாகவல்லோ
வாசிதன்னை பூட்டியே பூட்டியே யுள்ளடக்கி புரிந்திட்டாரே
விளக்கவுரை :