2696. மாட்டிப்பார் மெழுகாலே கிண்ணிபண்ணி மண்கட்டி மெழுகதனைத் தள்ளிப்போட்டு
ஊட்டிப்பார் உப்புருக்கி
யதிலேவார்த்து உத்தமனே உப்பினுட கிண்ணிதன்னில்
தீட்டப்பா ரடித்தூரில்
சீலைசெய்து சிறப்பான வாலுகையின் மேலேவைத்து
வாட்டிப்பார் சூதமது
சிறங்கைவிட்டு மயிற்கொன்றை சாற்றினாலே சுருக்குபோடே
விளக்கவுரை :
2697. சுருக்கிடவே சூதமது வெண்ணய்போலாம்
துடியான சூடனுட தீயில்வாட்டு
உருக்கிடவே கரண்டிதனில்
எண்ணெய்குத்தி யுருக்கமணிபோல் நின்றாடுங்கரியினுள்ளே
உருக்கிடவே செம்மட்டில்
தாழ்வடமாய்க் கோர்த்து உத்தமனே ஐந்தெழுத்தும் எட்டெழுத்துமோதி
நருகிடவே மனோன்மணித்தாய்
முன்வந்துநிற்பாள் நாடினதெல்லாஞ் சொல்லிரட்சிப்பாளே
விளக்கவுரை :
[ads-post]
2698. ரட்சிக்க வுப்பைநன்றாய்
கட்டியாடு நாதாந்த வழலையைத்தான் முன்னேபண்ணு
பட்சிக்கச் சூதத்தைச்
செந்தூரம்பண்ணு பார்க்கவே வேணுமென்றால் சாரனையைத்தீரு
குட்சிக்குள் வாயுவெல்லா
மறுத்துத்தள்ளு குடிலமாம் நரகத்தில் வழலைவாங்கு
பிட்சையெடுத்துண்ணாமல்
இரும்பாட்டிப்பாரு பெண்மாய்கைதனையறுத்துப் பின்பாய்நில்லே
விளக்கவுரை :
2699. நிலதென்றால் வாழ்வுனக்கு
நிற்குமோடா நேராக வழலையது சிக்கினாக்கால்
அல்லென்ற குபேரனைப்போல்
வாழ்வுண்டாகும் ஆதித்தனுள்ளவு உண்டுடுக்கலாகும்
கல்லென்ற கல்லுப்பு
கட்டிட்டானால் காரமாஞ்சூதத்தைக் கவ்விக்கொள்ளும்
மல்லென்ற சூதத்தி
லெட்டெட்டும்சித்தி வாய்வீணராய்த் திரிந்தால் மண்ணாய்ப்போமே
விளக்கவுரை :
2700. போகாமல் உப்பைமுந்தி
கட்டியுண்ணு பொய்யொன்றுஞ் சொல்லாதே புகழாய்எண்ணை
ஏசாதே மனதுதன்னிலிச்சியாதே
எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணிப்பாரு
வேகாதது எதுவென்று பாருபாரு
வெளியோடே மனந்திருந்தி எண்ணிப்பாரு
பாகாமல் வாசியைத்தான்
மூலத்திலுண்ணு பராபரியைப் பூசித்துப் பானம்பண்ணே
விளக்கவுரை :