2896. தெண்டமுடன் சட்டமுனி
தன்னைக்கண்டு தேர்வேந்தர் எமதர்மராசரண்டை
கொண்டுபோய் விட்டார்கள்
கோடிதூதர் கொற்றவனார் எமதர்மராசரங்கே
அண்டையிலே
தாருக்குமடியார்தம்மை அங்ஙனமே சாத்தரத்தை பார்ககச்சொன்னார்
தொண்டுசெய்யும்
முனிக்கூட்டம் ரிஷிகள்தாமும் சுருதியெனும் சாத்திரத்தை பார்த்தார்தாமே
விளக்கவுரை :
2897. பார்க்கையிலே சாத்திரங்கள்
மறைப்புமெத்த பாழாகிமாந்தரெல்லாம் சுட்டுமாண்டார்
தீர்க்கமுடன் மறைபொருளை
ஒளித்துச்சொல்லி திடங்குலைந்து போவதற்கு திறவுசொல்லி
சேர்க்கவே ஒன்றுவிட்டு
முன்பின்னாக செழிப்புடனே வுட்பொருளை யறியாமற்றான்
கார்க்கவே நூலதனைக்
கண்ணாற்காட்டி கருவாகத் தான்மறைத்தார் சித்தர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
2898. சித்தராஞ் சாத்திரத்தை
மறைத்ததாலே சீருடனே யவர்தனக்குத் தீர்ப்புசொன்னார்
மெத்தனவே தீவட்டிகொண்டுதம்மை
மேன்மையுடன் நாவுதனை சுடவுங்கண்டேன்
கத்தனே யான்செய்ததப்பிதத்தை
காத்துயென்னை ரட்சிக்கவேண்டுமென்று
சுத்தமுடன் கைகட்டி
வாய்புதைத்து சுந்திரனும் நின்றிருக்கப் பார்த்தேன்தானே
விளக்கவுரை :
2899. தானான யிவ்வார்த்தை
சாற்றப்போனால் தாரணியில் பொய்யென்று சொல்வார்மாண்பர்
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனாராசிர்மத்தாலே யானும்
தேனான குளிகையது
பூண்டுகொண்டு தெளிவுடனே பரலோகங்கண்டுவந்தேன்
மானான மஹேஸ்பரி பாதந்தொட்டு
மானிலத்தை கண்டொழித்து வந்திட்டேனே
விளக்கவுரை :
2900. வந்தேனே வைகுண்டம்
யானும்சென்றேன் வாகுடனே சித்தரகளைக் கண்டேன்யானும்
அந்தமுடன் தெண்டனைக்கு
வாளுமானார் அப்பனே யான்கண்டதனேகமுண்டு
சொந்தமுடன் எந்நாளும்
வைகுண்டத்தில் சந்தரனே இருக்கமனுதான்கொடுத்து
விந்தையுடன் வாக்கினைகள்
நேர்ந்துதங்கே வேகமுடன் காண்பேனே போகர்தாமே
விளக்கவுரை :