2801. கூட்டவே தைவேளைச்சாறுநாழி
குணமான பாவட்டை சாறுநாழி
நீட்டமுடன் தாமரைப்பூ
சாறுநாழி நேரான கொத்தான்சார் சாறுநாழி
பாட்டமுடன் முதியாகுச்
சாறுநாழி பாங்கான குமரிச்சார் சாறுநாழி
வேட்டவென்ற தைவேளைச்
சாறுநாழி தேனான மனோன்மணியாள் சாறுகூட்டே
விளக்கவுரை :
2802. கூட்டியே நல்லெண்ணெய்
படிதானொன்று குணமான வாவின்பால் படிதானொன்று
நாட்டமுடன் கடைசரக்கு
சாற்றக்கேளு நலமான கிராம்புடனே ஏலந்தானும்
வாட்டமுடன் சாதிக்காய்
சாதிபத்திரி வளமான குரோசானியோமந்தானும்
நீட்டமுடன் தக்கோலம்
பரங்கிப்பட்டை நேரான வால்மிளகு சுக்குதானே
விளக்கவுரை :
[ads-post]
2803. தானான சுக்குடனே
கருவாய்ப்பட்டை சாதகமாய் கடுக்காயும் தான்றிமுத்தம்
வேனான நெல்லிக்காய்
மிளகுதானும் விருப்பமுடன் கொடிவேலி பட்டையப்பா
பானான பாற்சுரண்டி
பட்டைதானும் பாங்கான வலம்புரியுமிடம்புரியுந்தானும்
கோனான முசுட்டையுடன்
தும்பைதானும் கூரான செம்பூரான் பட்டைதாமே
விளக்கவுரை :
2804. பட்டையுடன் கருஞ்சீரகம்
கார்போகந்தான் கருவான கிச்சிலியும் பச்சிலையுந்தானும்
திட்டமுடன் வகிற்கட்டை
தேவதாரி திடமான சந்தனமும் பூலாவாகும்
குட்டமருங்கவிப்பமளை
தீண்டாப்பாளை குறிப்புடனே பட்டையொடு குறிஞ்சான்வேறும்
நுட்பமுடன் விராலியிட
பட்டைதானும் நுணுக்கமுடன் யாவாரைப் பட்டைதாமே
விளக்கவுரை :
2805. தாமானப் பட்டையெல்லாம்
ஒன்றதாக தாக்குடனே வகைவகைக்குக் களஞ்சிரண்டு
சாமான மானதொரு பற்பந்தானும்
சாங்கமுடன் தானெடுத்து தேங்காய்ப்பாலில்
தூமானமாகவல்லோ
ஒன்றாய்க்கூட்டித் துப்புரவாய் தானரைப்பாய் மைபோலப்பா
நாமான நூல்வேதப்படிதான்பாரு
நாயகனே மூலியிடக் கூடப்போடே
விளக்கவுரை :