2901. தாமான போகர்முனி
சாற்றக்கேளும் சதாகாலம் வைகுண்டந்தன்னில்யானும்
வாமான வாக்கினையின்
பக்கந்தன்னில் வாகுடனே சுற்றிவரும்போதிலப்பா
நாமான கருவூரார்
தன்னைக்கண்டேன் நாயகனார் செய்ததொரு வண்மைகேளு
கோமானாம் அரசருக்கு
வாதஞ்சொல்லி கோடிபொருள் தானிழக்க செய்தார்தாமே
விளக்கவுரை :
2902. செய்ததனாற் சாபம்வந்து
நேர்ந்ததாலும் செயலான பாக்கியத்தை கெடுத்ததாலும்
பையவே பாண்டியர்க்கு
மோசஞ்சொல்லி பாங்குடனே தில்லைபதி சென்றாரங்கே
கைதவமாய் பாண்டியனார்
தேவஸ்தானம் கட்டினார் வெகுகோடி காலமப்பா
மெய்யடனே தேவஸ்தானந்தன்னில்
மேன்மைபெற விக்கிரகஞ் செய்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
2903. செய்திட்டர் எவர்தன்னால்
செய்தாரானால் செயலான கருவூரார் தன்னைக்கொண்டு
மைதிகழுஞ்சித்தர்
கருவூரார்தன்னை மன்னவனும் பாண்டியனார் தானழைத்து
வைபுகழுஞ் சித்தரே
கேளுமென்று வாகுடனே பாண்டியனார் வாக்களித்தார்
பொய்புகலா புண்ணியரே
கேளுஞ்சாமி பொன்னாலே விக்கிரகஞ் செய்யென்றாரே
விளக்கவுரை :
2904. என்றையிலே கருவூரார்
சொல்லக்கேட்டு எழிலான மன்னவரே தடையென்னோதான்
குன்றான மலைத்தங்கம்
கோடிமாற்று கொற்றவனே என்னிடம் மெத்தவுண்டு
பன்றான பாண்டியனார்
தாமுரைக்க பாலகனார் கருவூரார் உட்கொண்டேதான்
வன்றான திரவியத்தை
வாங்கிக்கொண்டு வளமுடனே கருவூரார் நடந்திட்டாரே
விளக்கவுரை :
2905. நடந்துமே கருவூரார்
பொன்னைவாங்கி நடராசர் விக்கிரகஞ் செய்யவென்று
கடந்துமே
காவேரிதன்னைத்தாண்டி காவலனார் அரண்மணையிற் தன்னிற்சென்று
தொடர்ந்துமே நடராசர்
கருவமைத்து சொரூபமுள்ள வுட்கருவை வுள்ளமைத்து
படர்ந்துமே மெழுகாலே
வுருக்கெடுத்து பாங்குபெற சிலைதனையே வமைத்திட்டாரே
விளக்கவுரை :