2766. தாமான பொன்னதுவு மாற்றாகும்
தனியான தங்கமது நாலுக்கொன்று
வாமான மென்றதொரு மட்டத்தோடு
வகையான பாகமுடன் வாரடித்து
சாமான மானதொரு காவிக்கல்லில்
சட்டமுடன் புடம்போடத் தங்கமாகும்
வேனான வெனதையர்
காலாங்கிநாதர் விருப்பமுடன் யான்வணங்கி விரித்திட்டேனே
விளக்கவுரை :
2767. விரித்திட்டேன் குடவனிலே
பத்துக்கொன்று வீரமுடன் கொடுத்திடவே மாற்றெட்டாகும்
செரித்திடவே மட்டமென்ற
பரிகள்மேலே சிறப்புடனே யுமிநீரால் செந்தூரத்தை
குரித்திடவே பொன்ற
கட்டின்மேலே பூசபொங்கமுடன் மாற்றதுவும் பத்தேயாகும்
முரித்திடவே சவளையது
போலாம்பாரு முனையான மாற்றதுவும் அதீதங்காணே
விளக்கவுரை :
[ads-post]
2768. காணவென்றால் செந்தூரம்
குன்றியுண்ண காயாதிகற்பமது வீறுமெத்த
தோணவே வனுபான மெதுவானாலும்
துரையோடும் முறையோடுங் கொண்டாயானால்
நீணவே தேகமது கற்றூணாகும்
நிலைத்ததடா தூலமது சாவேயில்லை
வாணவே நாதாக்கள் சொல்லவில்லை
வையகத்தில் போகரிஷி வகுத்திட்டானே
விளக்கவுரை :
2769. வகுத்திட்டேன் செந்தூரப்
போக்குதானும் வளமுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
தொகுத்திட்டேன் இன்னம்வெகு
அனந்தம்கோடி தோராமல் நூலதனைக்கண்டாராய்ந்து
பகுத்திட்டேன் சூதமென்ற
செந்தூரத்தை பலபலவாய்ப் பாடிவைத்தார் சித்தரெல்லாம்
பிகுத்திட்ட மானதொரு
மூன்றாங்காண்டம் பிசகாமல் பாடிவைத்தேன் சத்தந்தானே
விளக்கவுரை :
2770. சத்தமுடன் ஏழுவகைக்
காண்டஞ்சொன்னேன் சாகாமா மிந்நூலுக் கொருநூலில்லை
சித்தரெல்லா மொன்றாய்க்கட்டி
யென்னைசிறப்புடனே மதிலழைத்திட்டார்கள்
சத்தமுடன் அடியேனுந்தான்
வணங்கி துரைராசர் காலாங்கிதனை நினைத்து
பத்தியுடன் அடியேனும்
மனதிலுண்ணி பட்சமுடன் கூட்டமதிற் சென்றிட்டேனே
விளக்கவுரை :