போகர் சப்தகாண்டம் 2781 - 2785 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2781 - 2785 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2781. பூரமாங் கஸ்தூரி குங்குமப்பூ புகழான ரோசனையும் திப்பூண்டப்பா
காரமாங் குடோரியது சமனாய்க்கூட்டி கருவாக யௌநீராலே அரைத்துமைபோல
தீரமாங் கடலைபோலுண்டைசெய்து திறமாக நிழலுலர்த்திப் பதனம்பண்ணு
வீரமா மதன்ரதி தன்னோடொக்க விருப்பமுடன் தாம்பூலம் அருந்துவாயே

விளக்கவுரை :


2782. அருந்துகையால் உன்மீதிலிச்சைகொண்டு அணையவே எண்ணமது மிகவுண்டாகி
திருக்கவே போகமது செய்திட்டாலும் தீராது மாதர்மேலாசையப்பா
பொருந்தவே தேகமது கரிப்பேயில்லை பொங்காது விந்ததுவுங் கட்டிப்போகும்
கருந்தமுடன் தாம்பூலம் அருந்திப்பின்பு கொற்றவனே யௌநீரை யாண்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

2783. உண்ணயிலே பித்தமது கீழ்நோக்காகும் வுகாரமென்ற மயக்கமது மேலேறாது
திண்ணமுடன் கலவியது மன்மதன்போல் திகட்டாது மாதர்மேலாசைநீங்கா
உண்ணமது மிகவாகும் எந்தநாளும் இளைக்காது தேகமது கற்றூணாகும்
வண்ணமுடன் இப்பாகம் யாருஞ்சொல்வார் வையகத்தோர் சித்தாடச் சொன்னதாமே

விளக்கவுரை :


2784. தாமான மையொன்று சொல்லக்கேளும் சார்பான காகிதத்தின் தங்கவர்ணம்
காமான மஞ்சளென்ற கோபிதன்னால் கலரவிடு விளாம்பிசினைச் சமனதாக
பூமான் போலோர் உருவம் யெழுதியப்பா பொங்கமுடன் அவ்வுருவில் தூவக்கேளு
வேமான மானதொரு சரக்குசொல்வேன் வித்தகனே மேன்மையுடன் செய்துபாரே

விளக்கவுரை :


2785. செய்யவே சாரமது பலமொன்றாகும் சேர்மானங் கெந்தியொரு பலமொன்றாகும்
துய்யவே சூதமது பலமொன்றாகும் துப்புறவாய் வெண்வங்கம் பலமொன்றாகும்
நையவே காரமது சீனக்காராம் நாட்டமுடன் கல்வமதில் பொடித்துநன்றாய்
யெய்யவே பொடியாக்கிக் குப்பிக்கிட்டு என்மகனே கல்லாலே சில்லுபோடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar