போகர் சப்தகாண்டம் 2581 - 2585 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2581 - 2585 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2581. சென்றுமே ராசனிடஞ் சென்றுநீயும் சிறப்புடனே செந்தூரம் பரிட்சைகாட்டி
குன்றிய தளவாகத் தான்கொடுத்து கொற்றவர்க்கு பத்தியமும் இல்லாமல்தான்
வென்றுமே யவரிடத்தில் பிணிகள்தீர்த்து வேணவுபசாரமுடன் நிதிகள்பெற்று
நன்றலுடன் சோடசோ வுபசாரந்தன்னால் நாயகனே தண்டிகையும் தருவார்தானே

விளக்கவுரை :


2582. தானேதான் சென்றவிடஞ் சிறப்புமுண்டு தாரணியில் மாந்தரெல்லாம் பிரமைகொள்வார்
வேனான சித்துமுனி ரிஷியென்பார்கள் வேதாந்த சித்தாந்த குருவென்பார்கள்
கோனான தத்துவத்தில் கடந்தஞானி கொற்றவர்க்கு வுகந்ததொரு மகத்துவென்பார்
தேனான மனோன்மணியும் கடாட்சிப்பாளே தேர்வேந்த ராபரெல்லாம் தியங்குவாரே

விளக்கவுரை :

[ads-post]

2583. தியங்குவார் ராசமுடி மன்னரெல்லாம் தஇறமையுடன் கைகண்ட பாண்டியன்றான்
மயங்குவார் பூதலத்தில் ராசயோகன் மானிலத்தில் தன்வந்திரி யிவனென்பார்கள்
தயங்கவே அகத்தியனார் அவதாரம்தான் தாரிணியில் இவன்போல சித்தனுண்டோ
பயங்கமுடன் பலபலவாய்ச் சொல்லிக்கொள்வார் பூதலத்தில் நீயுமொரு சித்தனாமே

விளக்கவுரை :


2584. சித்தரகளும் உனைக்கண்டு பிமிப்பார்கள் சிறப்புடனே வந்துனக்கு யின்னஞ்சொல்வார்
பத்தியுடன் ஞானோபதேசஞ் சொல்வார் பாகமுடன் கைமுறையும் அனந்தம்சொல்வார்
முத்திபெரும் வழிதனையே காட்டுவார்கள் முயலான சின்மயத்திலிருந்துகொண்டு
சத்தியத்தை மறவாமல் தருமவானால் தாரிணியில் எந்நாளும் தழைப்பார்தானே 

விளக்கவுரை :


2585. தழைக்கவே யின்னமொரு கருமானஞ்கேள் தாரிணியில் மானிடர்கள் செய்யமாட்டார்
பிழைக்கவே வேண்டுதற்கு யின்னஞ்சொல்வோம் புகழான கல்லுப்பு சேர்தானொன்று
முழைக்கவே குழுக்கல்லில் தள்ளிவிட்டு முயற்சியுடன் தானரைக்க விபரங்கேளு
மழைகளிலே பூக்குமந்த காளான்தன்னை மாற்கமுடன் கொண்டுவந்து ஜலத்தைவாங்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar