2746. ஆச்சப்பா பிறவியது
என்னசொல்வேன் ஆச்சரியமாச்சரியம் வாதவித்தை
மூச்சப்பா விடுகாதே
மற்றோருக்கு முயலான சித்தரமுனி கண்டாரானால்
ஏச்சப்பா யுந்தனுக்கு
யிடையூறுண்டாம் என்மகனே சாபமது எய்தும்பாரு
பேச்சப்பா வாராது சிடிகைவேதை
பேருலகில் நீயுமொரு சித்தனாமே
விளக்கவுரை :
2747. சித்தனாம் சிவபூஜைக்குறுதித்
தங்கம் சிறப்பான சமுசாரிக்கேற்றவேதை
முத்தமுடன் கருவாளி
காண்பான்பாரு மோசமில்லை சாபமில்லை முனிவர்வேதை
நித்தமுமே பூசையது நேமநிஷ்டை
நிலையான தேசத்திலிருந்துகொண்டு
சத்தமுடன் சமுசார
தொல்லைவிட்டு சராசரத்தை ஒழிப்பவனே யோகியாமே
விளக்கவுரை :
[ads-post]
2748. ஆமேதான் இன்னமொரு மார்க்கம்பாரு அப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று
வேமேதான் துருசதுவும்
பலமொன்றாகும் வேகமுடன் தானரைத்து புடத்தைப்போடு
நாமேதான் சொன்னபடி
கூட்டிக்கொண்டு நன்மையுடன் கப்பலாய்ப்பாலைத்தாக்கே
விளக்கவுரை :
2749. தாக்கவே நாள்மூன்று
தப்பாமற்றான் தயவுடனே துருசுக்குப் பாலையூட்டு
நோக்கமுடன் ரவிதனிலே
காயவைத்து நுணுக்கமுடன் பற்பத்தை எடுத்துக்கொண்டு
தேக்கவே ரசமதுவை சரியதாக
திகழுடனே நிம்பழத்தின்சாற்றாலாட்டி
தூக்கவே பில்லையது
தட்டிமைந்தா துஃபுறவாய் ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
2750. காயவே வோட்டிலிட்டுச்
சிலைசெய்து கனிவாகக் குக்குடமாம் புடத்தைப்போடு
மாயாசமது தான்மடிந்துகொன்று
நயமுடனே கண்டமது பற்பமாச்சு
தோயவே பின்னுமந்த
பழச்சாற்றாலாட்டி தோறாமல் முன்போல பில்லைதட்டி
காயவே ஓட்டிலிட்டுச்
சீலைசெய்து தண்மையுடன் புடம்போடச் சுன்னமாச்சே
விளக்கவுரை :