2651. செய்யவே ரவிதனிலே காயவைத்து
செம்மையுடன் கோருபதுப்புடமதாக
துய்யவே தீமூட்டி
புடத்தைப்போடு துப்புரவாய்ப் புடமதுதான் ஆறிப்பின்பு
பையவே எடுத்துப்பார்
சாதிலிங்கம் பாகமுடன் கட்டியது வுருகிப்போகும்
மெய்யுடனே கட்டியது
எடுத்துமைந்தா மேன்மையுடன் செந்தூரஞ் செப்பக்கேளே
விளக்கவுரை :
2652. கேளேதான் செந்தூரம்
செயநீர்தன்னால் கெடியுடனே நாற்சாமம் சுறுக்குத்தாக்கு
வீனேதான் வீரமென்ற
செயநீர்தன்னால் வேகமுடன் தான்கொடுக்க காரமேறி
தானேதான் சட்டிதனில்
மணல்தான்கொட்டி சாங்கமுடன் சட்டிதனை நடுவேவைத்து
மீளேதான் மேலுமந்த
மணல்தான்கொட்டி விளங்கவே மேற்சட்டிகொண்டுமூடே
விளக்கவுரை :
[ads-post]
2653. மூடியே தானெரித்து
எட்டுசாமம் முனையான வாலுகையில் எடுத்துமைந்தா
நீடியே தீயாறி எடுத்துப்பாரு
நேர்மையுடன் செந்தூர மென்னசொல்வேன்
கூட்டியே செந்தூரம்
பதனம்பண்ணு கொற்றவனே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
வாடியே திரியாதே மைந்தாகேளு
மயங்காமல் கவயோட்டி லூதிப்பாரே
விளக்கவுரை :
2654. பார்க்கையிலே பொன்னதுவும்
மாற்றுகாணும் பாகமுடன் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து
தீர்க்கமுடன் வாரடித்துப்
புடத்தைப்போடு திறமான பொன்னதுவும் எட்டுமாகும்
வார்க்கவே மறுபடியும்
உருக்கியேதான் மறவாமல் செங்கல்லில் கம்பிசாய்த்து
ஆர்க்கவே தானெடுப்பாய்
கம்பிதன்னை அப்பனே பிறவியது பொன்னுமாச்சே
விளக்கவுரை :
2655. ஆச்சென்று விடுகாதே
மைந்தாகேளு அப்பனே குன்றியிடை தேனிலுண்ண
மூச்சின்றி வாசியது
கீழேநோக்கும் மூலமுதல் கபாலவரை வன்னிமீறும்
காய்ச்சலுடன் சன்னிபதி
மூன்றும்போகும் கடிதான வாயுவென்ற தெண்பதும்போம்
காய்ச்சலுடன் பிறவீச்சு
வுள்வீச்சேகும் நஅடாதுநாவரட்சி நளினமாமே
விளக்கவுரை :