2466. பண்ணவே யின்னமொரு மார்க்கம்பாரு பாங்கான மதியுப்பு சேர்தானொன்று
உண்ணவே சீனமது இருசேராகும்
வுத்தமனே சாரமது கால்சேராகும்
திண்ணமுடன் பூநீறு
சேர்தான்பாதி தெளிவான கல்லுப்பு சேர்தான்காலாம்
வண்ணமுடன் சரக்கெல்லாம்
ஒன்றாய்க்கூட்டி வளமாகத்தான் பொடித்து கலசமாட்டே
விளக்கவுரை :
2467. ஆட்டியே வாலுகையை மேலேவைத்து
அப்பனே சீலையது வலுவாய்ச்செய்து
நீட்டியே திராவகமும்
இறக்கிப்பாரு நிலையான திராவகமோ காந்தமெத்த
பூட்டகமாய் தானெடுத்து
சீஷாவிற்குள் புகழாகத் தானெடுத்துப் பதனம்பண்ணு
நாட்டமுடன் திராவகமோ
நவிலப்போமோ நாதாக்கள் செய்யார்கள் நன்மைபாரே
விளக்கவுரை :
[ads-post]
2468. நன்மையுடன் வின்னமொரு
மார்க்கம்பாரு நாதாக்கள் கண்டதில்லை சுளுக்குவேதை
உண்மையாயுறைக்கிறேன்
பாஷாணந்தான் வுத்தமனே சுங்கென்ற பாஷாணந்தான்
திண்மையுடன் சேரதுதா
னொன்றேயாகும் கதிப்பான வளையலுப்பு கால்தான்கூட்டே
விளக்கவுரை :
2469. கூட்டவென்றால் கலுவத்தில்
பொடியாய்ச்செய்து பொங்கமுடன் கலசமென்ற பானைதன்னில்
நீட்டமென்ற பொடிதனையே
பாண்டமிட்டு நேர்புடனே வாலுகையை மேலேவைத்து
தாட்டிகமாய் மூடியது வலுவாய்ச்செய்து
சாங்கமுடன் திராவகத்தை யெறக்கிப்பாரு
நாட்டமுடன் திராவகத்தை
பதனம்பண்ணு நலமாக சீஷாவில் அடைத்திடாயே
விளக்கவுரை :
2470. அடைத்துமே திராவகமோ காரமெத்த
அப்பனே திராவகத்தால் லோகம்நீறும்
புடைப்புடனே லோகத்துக்
காலனாகும் புகழாக சத்துருமித்துரு தானாகும்
படைப்புடனே திராவகத்தால்
காரசாரம் பாகமுடன் தான்மடியும் பண்போமெத்த
கடைப்புடனே இதனாலே
வயமுமாளும் கருவான திராவகமு மென்பார்தாமே
விளக்கவுரை :