போகர் சப்தகாண்டம் 2416 - 2420 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2416 - 2420 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2416. நின்றதொரு சமாதிமுத லெல்லாம்பார்த்து நேர்மையுடன் துதாபரத்து சேதிகேட்டு
தன்றனது வரலாறு யாவுஞ்சொல்லி சட்டமுடன் உபதேசம் பெற்றுமேதான்
குன்றுமலை வாருதியாரும்பார்த்து குவலயத்தில் காலாங்கிவந்துமல்லோ
சென்றுமே சமாதிக்கு பருவமானார் சிறப்புடனே காலாங்கிநாதர்தாமே

விளக்கவுரை :


2417. நாதரும் சமாதிக்குப் போகுமுன்னே நலமுடனே யடியேனும் போகர்தாமும்
பாதமுடன் அவர்பாதம் பணிந்துகொண்டு பாரினிலே வுபதேசம் யாவும்பெற்று
நீதமுடன் சீஷனில் நற்சீஷனாகி நிமையுடன் நாதனுடவருளும்பெற்று
போதமுடன் உலகுதனில் குளிகைபூண்டு புறப்பட்டுப்போனேனே சீனந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2418. தானான சீனபதி சென்றேன்யானும் தகைமையுடன் கருவெண்ணை சாற்றக்கேளும்
வேனான சிற்றினாமணக்கிணெண்ணெய் விரைவான வரிக்குமட்டி நதிக்குமட்டி
கோனான கழற்சிக்காய் முடக்கொத்தானும் கூறானவிரலினுடன் காட்டுள்ளிதானும்
பானான பிமியுடன் வறுகுதானும் பாங்கான மூலியுட சாறுகூட்டே

விளக்கவுரை :


2419. கூட்டவே எண்ணையது பங்கொன்றாகும் குமுறவே சார்மூலி பங்கொன்றாகும்
நீட்டமுடன் சரீரெடையாய் எடுத்துக்கொண்டு நெடிதான புங்கன்வேர் சங்கன்வேரும்
வாட்டமுடன் கொடிவேலி பங்கம்பாளை வாகான கிளுவையுட வாகைதானும்
மீட்டமுடன் கிளுவையது சங்குதானும் நெடிதான தலைச்சுருளி காக்கணாமே 

விளக்கவுரை :


2420. காக்கமுடன் திருகுமரி வெள்ளைசாறை கருவான மூவகையின் வேருங்கூட்டி
நோக்கமுடன் வகைக்கு ஒருபலமதாக நுணுக்கமுடன் தானிடித்துக் கூடப்போடு
தேக்கமுடன் கஸ்தூரிக் கள்ளிதானும் தேர்ந்துமே தானெடுத்து பிழிந்தசாறு
தூக்கமுடன் வகைக்குஒரு நாலதாக துப்புரவா எண்ணெய்தனைக் கலந்திடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar