போகர் சப்தகாண்டம் 2806 - 2810 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2806 - 2810 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2806. போடவே தான்கலக்கி யொன்றாய்தானும் பொங்கமுடன் தானரைப்பாய் மெழுகதாக
நீடவே தீயாறி எடுத்துப்பார்க்க நிலையான தயிலமது என்னசொல்வேன்
கூடவே பச்சையென்ற  பூரந்தானும் குணமான சாம்பிராணி களஞ்சிகூட்டு
தேடவே குங்குமப்பூ கஸ்தூரிதானும் தெளிவான ரோசனையும் பொடித்துப்போடே

விளக்கவுரை :


2807. பொடியுடனே தான்போட்டு யாறவைத்து புண்ணியனே முழுகிவரப் பலனைக்கேளு
நெடியுடனே தும்மலரும் சீதளம்போம் நெடிதான கபமுதலும் காணாதோடும்
கொடிபோன்ற நேத்திரன்பாலம்போகும் கொடிதான சுயரோகம் அகன்றுபோகும்
துடியான கண்ணிமையில் ஊறல்போகும் தூக்கமுடன் சோம்பலது வகலும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2808. பாரேதான் கண்ணோய்கள் தொண்ணூற்றாரும் பாங்கான யிமைதடிப்பு யுள்ளிபோகும்
நேரேதான் வாயுவெண்பதுவும்போகும் நெடிதான சேத்துமங்கள் கீழ்நோக்காகும்
கூரேதான் மயக்கமொடு வாந்திபோகும் குணமாகும் விக்கலொடு பொருமல்போகும்
தேரேதான் பீனசமுமெட்டுபோகும் தெளிவாகும் கண்ணிரண்டும் தெளிவாந்தாமே

விளக்கவுரை :


2809. தாமான கருமான மின்னமொன்று சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோமானுக்கொப்பான சூதராசன் குறிப்பாகத் தானெடுத்து சேர்தானப்பா
நாமான கண்டாகு சேர்தான்ரெண்டு நலமானதும்பைப்பூச் சாற்றினாலே 
சாமான சாமமொரு ரெண்டதாக சாங்கமுடன் தானரைப்பாய் சாகுமட்டே   

விளக்கவுரை :


2810. மாட்டான சூதமது மடிந்துகொல்லும் மாசற்ற வெண்ணெயதுயாகவென்றால்
திட்டமுடன் முமறியினாற் கழுவிப்போடு திரளான வெண்ணெயது மைபோலாகும்
சட்டமுடன் வெண்ணெய்க்குச் சப்தமில்லை சாதகமாய் கைதனிலே எடுக்கலாகும்
நட்டமில்லை பத்துக்கு ஒன்றுதங்கம் நாதாக்கள் முறைப்படியே கூட்டிக்கொள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar