2926. கூறினார் சாத்திரங்கள்
சித்தர்பாலில் குறுக்குமுறை நெடுக்குமுறை யனந்தங்கோடி
மீறினார் முன்பின்னாய்
பாடிப்போட்டார் மிக்கான சாத்திரத்தின் நேர்மைதானும்
தூறினார் குற்றங்கள்
மிகவாய்ச்சொல்லி தூற்றினார் யாக்கோபு நூலைத்தானும்
மாறினார் சித்தர்முனி
சாத்திரத்தை மார்க்கமுடன் தான்கெடுத்தார் பான்மையாமே
விளக்கவுரை :
2927. பான்மையுடன் வெகுமாந்தர்
கெட்டுப்போயி பாழாகி சாத்திரத்தில் முழுகிப்போனார்
வான்மையுடன் யாக்கோபு
செய்தபாவம் வைகுண்ட மவர்தனக்கு கேள்விமெத்த
மேன்மையுடன் சாபமது
நேர்ந்ததாலே மேலுக்கு மின்னமொரு பிறவிகாண
மாண்மையுடன் தண்டனைகள்
மிகவுமாகி மன்னருக்கு மறுபிறப்பில் குறைவுண்டாச்சே
விளக்கவுரை :
[ads-post]
2928. உண்டான முறைகளை
யான்கண்டுவந்தேன் உத்தமனே வுலகுதனிற் சொல்லப்போனால்
சண்டாள மானதொருசிலது
மாண்பர்சார்பான பொய்யென்று சாற்றுவார்கள்
கண்டாலும் பொய்யென்று
கதறுவார்கள் சதாகாலங் கருமத்துக்கேதுவாவார்
திரண்டாம முறைமையிது
சொல்லவந்தேன் திறமான போகரிஷி கண்டதாமே
விளக்கவுரை :
2929. கண்டதொரு ஜோதிமுறை
யின்னஞ்சொல்வேன் கைலாச வைகுண்டபதியின்சேதி
அண்டமுனி சிசுபாலன் அவனுக்கு
சீஷனவன்பேரு சட்டைமுனி யென்பாரப்பா
கொண்டல்வண்ணன்
ராவணனார்கிடையே செய்து கோடிமுறை தபசிகட்கு வின்னஞ்செய்து
தண்டவமை தானிருந்து
ரிஷிகள்சாபம் சாற்றினார் சாத்திரத்தின் தன்மைதானே
விளக்கவுரை :
2930. தானான சாத்திரத்துக்
கிடையேசொல்லி தப்பிதங்களாகவேதான் கெடுத்துப்போட்டு
கோனான எனதையர் காலாங்கிதன்னை
கொண்டபடி யவர்பேரில் தோஷஞ்சொல்லி
வேனான கருவெல்லாம்
மறைத்துப்போட்டு வேதமுதல் சாத்திரங்கள் பொய்யாச்சொல்லி
பானான பலவிதமாய்ப்
பாடிவிட்டார் பாருலகில் சட்டமுனி சரிதையாமே
விளக்கவுரை :