போகர் சப்தகாண்டம் 2691 - 2695 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2691 - 2695 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2691. பாரென்ற வழலையென்ற சுன்னமொன்று பரிவாகச் சுன்னமொன்று கூட்டியாட்டே
நேரென்ற ஜலமாகுஞ் ஜலத்தினுள்ளே நேர்ப்பாக கற்பூரம் வாரியிட்டு
காரென்ற ரவியில்வைத்து வுப்பாய்ப்பண்ணி கடுகைந்து கிண்ணமதில் வைத்துவூற்ற
நூரென்ற மல்லிகைப்பூப் போலாகுஞ்சுன்னம் துரிசான சாரயிடை சுன்னங்கூட்டே

விளக்கவுரை :


2692. சாரமிட செயநீராம் வீரம்போட்டு தயங்காத கல்லுப்புச் சூடந்தானும்
ஆரமிட்ட வெடியுப்பு சீனக்காரம் ஐந்தையுந்தான் வகைக்கு ரண்டுபலமேகூட்டி
காரமிட்ட செயநீரா லரைத்துருட்டி கடுரவியிற் போட்டுவர தினந்தானேழு
தாரமிட்ட சுண்ணாம்பு போலேயாகுந் தயங்காத குழம்புபோல் பண்ணிக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

2693. பண்ணியதோர் குழம்புக்குள்ளே பாறையுப்பு பலம்பத்து நிறுத்தெடுத்துப் பாக்குபோல
ஒண்ணியதோர் குழம்புக்குள் பிசறிவாட்ட உற்றுநன்றாய் குழம்பையெல்லாம் பிரட்டிபோடு
கண்ணியதோர் தீயிற்குள் முதிமவாட்டி நலமான வுவர்மண்ணும் கிளிஞ்சள்நீரும்
கண்ணியதோர் அமுரிவிட்டு பிசைந்துகொண்டு கடுகவே கீழ்மேலும் மடபோல்மூடே

விளக்கவுரை :


2694. மூடியே சட்டியிலே யிட்டுநன்றாய் முடிந்தபின்பு அன்பதெரு வடுக்கிப்போடு
நாடியே குளிர்ந்தபின்பு எடுத்துப்பாரு நலமான தங்கம்போலிறுகிக்கட்டும்
சூடியே கவசமெல்லாந் தள்ளிப்போட்டு துடியான கட்டுகொடி இலையைவாங்கி
தேடியே பழச்சாறு விட்டரைத்து திறமாகக் கவசித்துப் புடத்தைப்போடே

விளக்கவுரை :


2695. புடம்போட்டு உப்புமணி பார்த்தால்மக்கள் பேறான முத்துமண்போலக்காணும்
விடம்போட்ட சிவன்வந்து நிர்த்தஞ்செய்வார் வேதாந்தத்தாயீயிஎஃகே அஷ்டசித்தியாவாள்
தடம்போட்ட நிராதார வொளியுஞ்சொல்வாள் சதாநித்தம் குருபதத்தில் சரணம்பண்ணி
வடம்போட்டு வுப்புமணி செபித்தமாலை மகத்தான சித்தியுமா மாட்டிப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar