2906. அமைத்திட்ட கருவதனை
வுருக்கொண்டேத்த அப்பனே மண்ணாலே மூசைபண்ணி
சமைந்திடவே கருக்குருவும்
ஓடிப்பாய சட்டமுடன் தாள்திறந்து பாச்சியங்கே
தமைந்திடவே தங்கமதை
செம்புதாக்கி தயவுடனே விக்கிரகஞ் செய்தாரங்கே
துமைந்திடவே தங்கமது
செம்புமாக்கி சொரூபமென்ற வுருவமதை மாத்திட்டாரே
விளக்கவுரை :
2907. மாத்தியே செம்பாலே வுருவமைத்து மன்னவனார் பாண்டியனார் முன்னேவந்து
நேத்தியுள்ள பிரதமையான்
செய்துவந்தேன் நேர்மையுள்ள பாண்டியனே கண்டுகொள்ளு
பூர்த்தியடன் மனதுவந்து
கருவமைத்து புண்ணியனாம் பாண்டியனார் முன்னேவைக்க
தீர்த்தமுடன் பாண்டியனார்
ஆசீர்மிக்க திகழுடனே எதிர்கொண்டு புறப்பட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
2908. புறப்பட்ட போதையிலே
கருவூரார்தாம் பூபால பாண்டியனார் வரவுகண்டு
சிறப்புடனே பாண்டியர்க்கு
எதிரேசென்று சிற்பரனார் முடிவணங்கி தெண்டனிட்டு
திறமுடைய சிலையொன்று
நடேசர்தாமும் சீர்பெறவே செய்துவந்தேன் சாமியென்ன
குறமனதாய் பாண்டியனும்
திடுக்கிட்டேங்கி கோபமுடன் சிலைதனையே பார்த்திட்டாரே
விளக்கவுரை :
2909. பார்க்கையிலே செம்பான
சிலையைக்கண்டு பாதகனே பாண்டியனே மோசஞ்செய்தீர்
தீர்க்கமுடன் உன்கையில்
பொன்கொடுத்தேன் திறலான பொன்னையெல்லாம் மோசஞ்செய்தீர்
ஏர்க்கையிலே ஜாதினது
புத்திதானோ எழிலான சிற்பரனே வகடுசெய்தீர்
சேர்க்கையிலே பொன்னோடு
செம்புசேர்த்து சேர்வைதனை கண்மறைக்க மறைத்திட்டீரே
விளக்கவுரை :
2910. மறைத்திட்ட பொன்னதனை
மோசஞ்செய்து மன்னவனே செம்புதனைக் கைகொடுத்து
குறைத்திடவே என்மனதை
புண்ணதாக்கி குவலயத்தில் பெருமோசஞ் செய்தபாவி
வறைத்திடவே கருவூரார்
தன்னையங்கே வாகுடனே சிறைச்சாலைக் காவலுக்குள்
முறைப்படியே வதிகாரி
கொண்டுசெல்ல மூர்க்கமுடன் கரூவூரார் வுரைத்தார்பாரே
விளக்கவுரை :