போகர் சப்தகாண்டம் 2881 - 2885 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2881 - 2885 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2881. பார்க்கவென்றால் எந்தனது கணக்குகண்டேன் பாருலகில் மூன்றுயுக மிருக்கக்கண்டேன்
தீர்த்தமுடன் கணக்கெல்லாம் பார்த்தாராய்ந்து திறமுடனே கண்டுவந்தேன் தெளிவதாக
ஏர்க்கவே சத்தலோகத்தின் மார்க்கம் எனைப்போல கண்டவருமொருவருண்டோ
நாற்கமல வட்டத்தாலாயிபாதம் நான்வணங்கி கண்டறிந்தேன் அவித்தேனே

விளக்கவுரை :


2882. தானான முன்யுகத்தில் பிருமாவுக்கு தாக்கான ஈஸ்பரியாள் தந்தசாபம்
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருசாமி எந்தனுக்கு சொன்னதுண்டு
தேனான பிருமாவும் வைகுண்டத்தில் தேர்வேந்த ராசரிட மிருக்கக்கண்டேன்
பானான ரிஷிகூட்டமாயிரம்பேர் பாங்கான பிரமனிடம் கண்டேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2883. கண்டேனே யின்னும்வெகு அதிசயத்தை காசினியில் ஆருந்தான்கண்டதில்லை
திண்டான வாத்துமகோடி கூறொண்ணாது வுத்தமனே யவரவர்கள் செய்தபாவம்
கொண்டான மட்டுக்கும் வாக்கிசனையும் குறிப்புடனே நேமிப்பார் தருமராசன்
சண்டாள மானதொரு கர்மியோற்கு சதாகால மாக்கினைகள் நேருந்தானே

விளக்கவுரை :


2884. நேரவென்றால் புண்ணியர்கள் மெத்தவுண்டு நெடுங்காலம் தவமிருப்பார் மனுக்கள்கோடி
சேரவே வெகுநாளாயிருந்து பார்த்தேன் சேனைதிரள்கூட்டங்கள் புண்ணியவான்கள்
கூரவே முடியாது சோடாசாரம் சொன்னாலும் நம்பார்கள் கர்மிமாண்பர்
திறமுடனே வடியேனும் கிட்டிருந்து திகழுடனே கண்டேனே போகர்தாமே

விளக்கவுரை :


2885. தாமான மின்னமொரு கருமானங்கேள் தயவாகச் சொல்லுகிறேன் தன்மையாக
சாமான மானதொரு வகத்தியர்தாமும் சாங்கமுடன் வைகுண்டந்தன்னிற்கண்டேன்
கோமானங் கொங்கணவர் செய்தபாவம் குவலயத்தில் முற்பிறப்பில் மெத்தவுண்டு
பூமானாம் கொங்கணரைக்கேள்விகேட்டு புத்தியுடன் தண்டனைக்குள்ளாக்கினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar