போகர் சப்தகாண்டம் 2821 - 2825 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2821 - 2825 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2821. செப்பவென்றால் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று செழிப்புடனே தானுருக்கி குருவொன்றீய
ஒப்பமுடன் கரிபோல யிருக்கும்பாரு உத்தமனே ஓட்டிலிட்டு யூதிப்போடு
துப்புறவே மாற்றெட்டு காணுங்கண்டீர் தாக்குவாய் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து
துப்புறவே வாரடித்துப் புடத்தைப்போடு தூய்மைபெற மாற்றதுவும் ஒன்பதாமே

விளக்கவுரை :


2822. தாமான மாற்றதுவும் மதிமயங்கி தாரிணியில் மாந்தருக்கு மிருதுதங்கம்
நேமமுடன் சிவயோகி தங்களுக்கு நிஷ்டைக்குமானதொரு தங்கமாகும்
பானமெனும் வஸ்துசுத்தி நேமனிஷ்டை பண்பாக பராபரிக்கு பாலித்தேதான்
கியானமுடன் சதாகாலம் வேதமாகும் கீர்த்தியுடன் தான்படித்து செலவுசெய்தே

விளக்கவுரை :

[ads-post]

2823. செய்யவென்றால் அதிதிபெறபரதேசியற்குச் செப்புகிறேன் காவிகாஷாயாமப்பா
தையலென்னுமாதருக்கு வஸ்திரதானம் சதாகாலஞ்செய்யுதற்கு மனமுங்கொள்வாய்
வெய்யலிலே தாகவிடாய் தேருதற்கு விருப்பமுடன் கேணிகுளம் எடுக்கநன்று
மையலெனும் மங்கையரை கன்னிகாதானம் மாட்சியுடன் செய்யவென்று மதிப்பிட்டாரே

விளக்கவுரை :


2824. மதிக்கவே யின்னமொரு கருமானங்கேள் மாசற்ற அயமதுதான் சேர்தானொன்று
துதிக்கவே செம்பதுவுஞ் சேர்தான்பாதி துடியான கண்டரது சேர்தான் பாதி
கதிக்கவே காரமது சேர்தான்காலாம் கருவான சாரமது சேர்தான்காலாம்
விதிப்படியே சரக்கெல்லாம் ஒன்றாய்க்கூட்டி வித்தகனே கல்வமதில் பொடித்திடாயே

விளக்கவுரை :


2825. பொடித்துமே வச்சிமாங்குகையிலிட்டு பொன்னவனே சில்லிட்டுச் சீலைசெய்து
வெடிக்காமல் ரவிதனிலே காயவைத்து வேகமுடன் சரவுலையில் வைத்துவூது
நடிக்கவே மூசைதனையடைத்துப்பாரு நளினமாஞ் சரக்கதுவுஞ் செம்புசேர்ந்து
துடிப்பான அயமதுவும் சத்தேயாகி துறையான களங்கமது போலாம்பாரே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar