2546. ஊத்தியபின் புட்டிதனை
மூடிப்போடு உத்தமனே ராசரிடம் சென்றுநீயும்
நேத்தியுடன் புட்டிதனை
கைகொடப்பா நேரான புட்டிதனை பார்க்கும்போது
மாத்தலுடன் புட்டிக்குள்
முட்டையப்பா மன்னவனே சென்றவழி வதிதவித்தை
காத்தலுடன் வாச்சரிய
வித்தைதன்னைக் காண்கிலோர் ராசரெல்லாம் மயங்குவாரே
விளக்கவுரை :
2547. மயங்குவார் வித்தையிது
மண்டலத்தில் மாற்றானுங் கண்டறியான் வினோதவித்தை
தயங்கியே செய்தாலும்
காணமாட்டார் தகைமையுள்ள கருவாளி காண்பான்பாரு
புயங்கமுடன் தாரிணியில்
மற்றோராலும் புகழ்ச்சியுடன் செய்யுவது அருமையாகும்
வயங்கமுடன் காலாங்கி
நாயர்பாதம் வாகுடனே தாள்பணிந்து பாடினேனே
விளக்கவுரை :
[ads-post]
2548. பாடியே யின்னமொரு கருமானங்கேள் பாலகனே மாணாக்கள் பிழைக்கவென்று
தேடியே நிமிளையது தங்கமப்பா
தெளிவான நிமிளையது கூறக்கேளு
வாடியே திரியாதே மன்னாபாரு
மகத்தான செம்புத் தகட்டின்மேலே
நீடியே சூதவத மேனிச்சாற்றால்
நேர்மையுடன் தானரைத்துப் பூசிடாயே
விளக்கவுரை :
2549. பூசியே நிமிளைதனை
பொடித்துக்கொண்டு பொன்னவனே கரியோட்டில் துட்டுவைத்து
ஆசியே நிமிளைதனை சன்னமாக
வப்பனே கீழ்மேலும் பொதிந்தபின்பு
காச்சிக்கு சீலையது
வலுவாய்ச் செய்து கருத்துடனே கவுதாரி புடந்தான்போடு
மாசிபோல் வர்ணமது
மிகவுண்டாகி மன்னவனே தாம்பரமும் பழுக்கும்பாரே
விளக்கவுரை :
2550. பாரேதான் தாம்பரமும்
பொன்னுமாகும் பாங்கான நிளையது வர்ணமெத்த
சீரேதான் உருக்கிப்பார்
மாற்றெட்டாகும் சிறப்பான வர்ணமது தூம்பரவேதை
வேறேதான் காணவுமே வதீதவேதை
வேடிக்கை சிமிட்டுவித்தை வித்தைசித்தர்
கூரேதான்
சீனபதிமார்க்கத்தார்கள் குறிப்புடனே செய்வார்கள் கோடிதானே
விளக்கவுரை :