2481. கட்டியென்னும் ரத்தமென்ற
பாளமாச்சு காசினியில் ஆருந்தான் கண்டதில்லை
திட்டமுடன் சொல்லிவட்டோம்
சீனத்தாற்கு திறமுடனே கண்டறிந்தோர் புத்திவானாம்
சட்டமுடன் இன்னமொரு
பாகஞ்சொல்வோம் சார்வான இரும்பினுட சத்தைவாங்கு
வட்டமென்ற கொப்பறையில்
துப்பைக்கொட்டி வாகுடனே செம்மரத்தின் தூள்தான்போடே
விளக்கவுரை :
2482. போடையிலே ஜலமதுதான் பாண்டமிட்டு பொங்கமுடன் பட்சம்சென்றெடுத்துப்பாரு
கூடையிலே ரண்டுமொன்றாய்
சேர்ந்துகொண்டு குணமான சிட்டம்போலிருக்கும்பாரு
நாட்டமுடன் இரும்பென்ற
வாலைக்குள்ளே நளினமுடன் தான்கொட்டி வரைத்திட்டேதான்
சாடவே சீலைக்கட்டு
காரமேற்றிச் சார்பாகக் கரைகட்டி யோரந்தீத்தே
விளக்கவுரை :
[ads-post]
2483. தீத்தையிலே பலபலவாம்
ரூபம்காட்டும் சிவப்புமுதல் பஞ்சவர்ணம் காணலாகும்
தீத்தையிலே
காரங்களில்லாப்பக்கம் தெளிவான வர்ணங்கள் காணலாகும்
தீத்தமுடன்
வர்ணங்களெழுதலாகும் திறமான இரும்பினுட காரந்தன்னால்
சீத்தமுடன் செம்பினுட
சத்துசேர்ந்து சிறப்பாகத் தானுருக்கி யெடுத்திடாயே
விளக்கவுரை :
2484. எடுத்துமே வயதினிட பாகம்போல
எழிலான கவகிலமாம் மட்டைதூளும்
தொடுத்துமே செம்பினுட
சத்துசேர்த்து தோற்றமுடன் ஆலைதனிலரைத்துக்கொண்டு
தடுத்துமே வயதினிட
வர்ணத்தாலும் தாக்கான செம்பினிட வர்ணத்தாலும்
அடுத்தஉமே சீலைகட்டு
வர்ணமாச்சு அப்பனே சீனபதி வுளவுதானே
விளக்கவுரை :
2485. உளவான சீனபதி வேதைமார்க்கம்
வுத்தமனே வேடிக்கை யின்னஞ்சொல்வோம்
தலமான காயிதம்சன்னமட்டும்
தான்செய்யும் விபரங்கள் சாற்றக்கேளு
நலமான தடமதுவும் கெஜநூறாகும்
நளினமுடன் கலமதுவும் கெஜநூறாகும்
மளமான சுற்றோரக்
கிராதிக்கம்பி மார்க்கமுடன் தானமைத்தை வாலைபூட்டே
விளக்கவுரை :