போகர் சப்தகாண்டம் 2686 - 2690 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2686 - 2690 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2686. தானென்ற நூல்பார்த்து வுலகவாதி தனித்துமே மனம்புண்ணாய் வெறுமையுற்று
வாவென்ற வுலகத்தார் சிரிக்கக்கேட்டு மருட்கொண்ட பிசாசுபோல் வாயுலர்த்தி
ஊனென்ற சொத்துக்கு மிடமில்லாமல் உண்பாரை வுடுப்பாரை பார்த்துசங்கி
நானென்ற ஆணுவத்தால் கெட்டோமென்று நாய்போல திரிந்து மண்ணுள் மாளுவாரே

விளக்கவுரை :


2687. மாளாமலிருக்கவல்லோ வழலைதன்னை மறையாமல் சொல்லிவிட்டே னேழாயிரத்துள்ளே
கோளான சீஷருக்கு நூலீயவேண்டாம் கொடுத்தாக்கால் ரவிகோடி நரகமெய்தும்
தாளான எந்நூலில் வழலைதன்னை சாற்றினேன் ஒருசொல்லுந்தவறில்லாமல் 
நாளான அம்பரத்துக் கொப்பாய்சொன்னேன் நாதாக்கள் பதமறிய சொன்னேன்காணே

விளக்கவுரை :

[ads-post]

2688. காணப்பா புடம்போட வழலைதன்னை கடுங்காரச் செயநீர்தன்னில் தோய்த்துப்போடு
பூணப்பா ஏழுநாள் ரவியிற்போட்டு பேரான சுன்னமென்ற குளிகையிலூது  
தேணப்பா எடுத்துடனே பூப்போல் நிற்கும் தொடுகுறிபோல் சரக்கையெல்லாம் துடியாய்கொல்லும்
வீணப்பா கெடுக்காதே எந்நூலைப்பாரு வேதாந்தமாயிதை பூசிப்பாயே

விளக்கவுரை :


2689. பூசித்து வழலையைத்தான் சுண்ணம்பண்ணு புத்திகெட்ட வாதிகளே மற்றொன்றாகா
நேசித்து வழலைதனி லுப்பைக்கட்டு நிலைத்தபின்பு பூரணத்தைச் சுன்னம்பண்ணு
ஆசித்துப் பூரத்தால் தாளகத்தைப்பண்ணு அதீதமாந் தாளகத்தால் வங்கத்தைநீற்று
வாசித்தஉ வாலைதனைப் பார்த்தாலாமோ வாதமென்ன கொஞ்சத்திலாமோ சொல்லே

விளக்கவுரை :


2690. சொல்லென்ற வங்கத்தில் திரிதெனைநீற்று துரிசியினால் சிங்கிப்பண்ணு சூதங்கட்டு
மல்லென்ற சூதத்தால் காயசித்தி கெவனத்தில் எட்டெட்டுஞ்சித்தி
அல்லென்ற கேழ்வியினால் வாதஞ்சுட்டு ஆற்றாமல் பொய்யென்றால் என்னசொல்வேன்
நில்லென்றால் எறிந்தகல்லும் நிற்குமோசொல் நிர்மூட வாதிகளே வழலைநீபாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar