2541. ஒண்ணது பற்பத்தை
பணவிடைதானும் உத்தமனே வெண்ணெய்தனில் கொண்டாயானால்
நண்ணாது நோயேது ரோகமேது
நாடாது காலனுமே நாடமாட்டான்
திண்ணாலும் காயகற்ப
மிதற்கொவ்வாது திறமையுடன் செய்துகொண்டோன் புத்திவானாம்
பண்ணாலு முடியாது பாரிலப்பா
பாக்கியவான் செய்துகொள்ளும் வேதையாமே
விளக்கவுரை :
2542. வேதையிலே யின்னமொரு
பாகங்கேளு விருப்பமுடன் சூரணங்கள் எதுவானாலும்
தீதையிலே வனுபானம்
தெரிந்துகொண்டால் தேகமது கற்றூனாகும்பாரு
போதையிலே காயாதி கற்பமாகும்
பொங்கமுடன் உண்டவருக்கு பலனுண்டாகும்
பாதையிலே மேகமென்ற
யிழிவுபோகும் பாரினிலே நீயுமொரு சித்தனாமே
விளக்கவுரை :
[ads-post]
2543. சித்தனா மின்னமொரு
மார்க்கம்பாரு சிறப்பான பெருஞ்சாதி கோழியொன்று
முத்தலாய் கொண்டுவந்து
வலயமிட்டு முதன்மையா முட்டைதனை யெடுத்துமைந்தா
சுத்தமுள்ள பூநீராம்
புட்டியொன்று சூட்சமுடன் சின்னவாய் கொண்டதாக
வெத்தியுடன் முட்டைக்குள்
புட்டிபோக விருப்பமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
2544. பண்பான முட்டைதனை
செப்பக்கேளு பாகமுடன் காரமென்ற காடிதன்னில்
திண்புஐடனே மூன்றுநாள்
முட்டைதன்னை திறமுடனே யூறினபின் எடுத்துப்பாரு
நண்பான முட்டையது காரமேறி
நவிலவே வோடதுதான் சவ்வுபோலாகும்
தண்பான முட்டையது
தளர்ந்துபோகும் தாக்கடா புட்டியென்ற சீஷாதானே
விளக்கவுரை :
2545. தானான சின்னவாய்ச்
சீஷாக்குள்ளே தள்ளடா முட்டைதனை யுள்ளேபோகும்
வேனான முட்டையது சென்ற
பின்பு விருப்பமுடன் பாணியென்ற தண்ணீர்தானும்
கோனான புட்டிக்குள்
ரொம்பவிட்டு குறையாமல் சீஷாவை மூடிப்போடு
கோனான முட்டையது கல்லுபோலாம்
தீவிரமாய் பாணிதனை வூத்திடாயே
விளக்கவுரை :